Kushboo - கவுண்டமணி அப்படிப்பட்டவர்தான்; அப்பாவை பார்க்கவே இல்லை.. குஷ்பூ பகிர்ந்த டாப் சீக்ரெட்
சென்னை: Kushboo About her Father (தந்தை குறித்து குஷ்பூ பகிர்ந்த ரகசியம்) நகைச்சுவை நடிகர் கவுண்டமணி குறித்தும், தனது தந்தை குறித்தும் நடிகை குஷ்பூ ரகசியம் பகிர்ந்திருக்கிறார்.
தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் குஷ்பூ. முதல் படத்திலேயே தனது அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்த குஷ்பூ தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ரஜினி, கமல் என 80களின் முன்னணி நட்சத்திரங்களுடன் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்.

சென்சேஷனல் குஷ்பூ
மும்பையை பூர்வீகமாகக் கொண்டாலும் குஷ்பூ தமிழில் நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழை முறையாக கற்றுகொண்டவர். தனது சொந்த குரலில் வெகு விரைவிலேயே டப்பிங்கும் பேச ஆரம்பித்துவிட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ரவுண்டு கட்டி வலம் வந்தவர் குஷ்பூ. தமிழ்நாட்டில் குஷ்பூ இட்லி எனும் அளவுக்கு சென்சேஷனல் ஆனவர்.

குஷ்பூ கொடுத்த தொடர் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள்
இப்போது அரசியல்வாதியாக இருந்தாலும் குஷ்பூ முன்னணி கதாநாயகியாக இருந்தபோது தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்தவர். கமலுடன் இணைந்து மைக்கேல் மதன காமராஜன், வெற்றிவிழா, சிங்காரவேலன் என மெகா ஹிட்டுகளையும், ரஜினியுடன் இணைந்து அண்ணாமலை, மன்னன், பாண்டியன் என ப்ளாக்பஸ்டர்களையும் கொடுத்திருக்கிறார்.

ஒரே வருடத்தில் 10 படங்களில் பிஸி
90களில் குஷ்பூ மிகவும் பிஸியான நடிகையாக இருந்தார். குறிப்பாக 1992ஆம் ஆண்டு மட்டும் அவர், "மன்னன், ரிக்ஷா மாமா, பாண்டித்துரை, சிங்காரவேலன், சேவகன், இது நம்ம பூமி, அண்ணாமலை, அம்மா வந்தாச்சு, நாளைய செய்தி, பாண்டியன் என மொத்தம் 10 தமிழ் படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. அந்த அளவுக்கு குஷ்பூ மிகவும் பிஸியாக இருந்தவர்.

கவுண்டமணி குறித்து குஷ்பூ
இந்நிலையில் சமீபத்தில் கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் அவரிடம் கவுண்டமணி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "கவுண்டமணி சார் எவ்வளவுக்கு எவ்வளவு நகைச்சுவை செய்கிறாரோ அந்த அளவுக்கு சீரியஸான ஆள். இப்படி ஒரு சீரியஸான ஆளை எனது வாழ்நாளில் பார்த்ததே இல்லை" என பதிலளித்தார். பொதுவாக கவுண்டமணி குறித்து பேசும்போது அனைவரும் இதையேத்தான் சொல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பாவை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன
அதேபோல் சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்குத்தான் குஷ்பூவுக்கு ஆசையாம். ஆனால் பேராசை பிடித்த குஷ்பூவின் அப்பா நிறைய பணம் கொடுப்பவர்களின் படத்தில் நடிப்பதற்கு குஷ்பூவை கமிட்டாக்கினாராம். அதனால் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்தாராம் குஷ்பூ. ஒருகட்டத்தில் 14ஆவது வயதில் தந்தையிடமிருந்து பிரிந்துவிட்ட குஷ்பூ தனியாக வந்துவிட்டாராம். சென்னை வந்த 36 வருடங்களில் ஒருமுறைக்கூட அவரை சந்தித்ததே இல்லையாம். அதுகுறித்து எந்த கவலையும் குஷ்பூவுக்கு இல்லை. ஏனென்றால் சிறு வயதில் குஷ்பூவை பாலியல் ரீதியாக சீண்டியிருக்கிறார் அவரது தந்தை. இதனை அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications











