குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஷூட்டிங் மும்முரமாக நடந்துவருகிறது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். படத்தின் டைட்டில் டீசர் நேற்று மாலை வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தச் சூழலில் நடிகை குட்டி பத்மினி ரஜினி குறித்து பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

ரஜினிகாந்த்தை ரசிக்காதவர்கள் இந்தியாவில் யாருமே இல்லை. இதுவரை 169 படங்களில் நடித்திருக்கும் அவர் தனக்கென்று தனி ஸ்டைல், டயலாக் டெலிவிரி, நடை, உடை, பாவனை என புதிதாக உருவாக்கிக்கொண்டு இந்திய சினிமாவை ரூல் செய்துவருகிறார். இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் விளங்குகிறார் ரஜினிகாந்த். சிறுவர் முதல் பெரியவர்வரை; சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை அனைவரிடமும் ரஜினிகாந்த்தின் தாக்கம் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதே எதார்த்தம்.

Kutty Padmini Shares About Experience With Rajinikanth

ஜெயிலர்: அப்படிப்பட்ட ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாகவே ஒரு ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்தார். தர்பார், அண்ணாத்த படங்கள் சறுக்கலை ஏற்படுத்தியதால் அவரது சூப்பர் ஸ்டார் நாற்காலி ஆட்டம் கண்டுவிட்டதாக குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன. இந்த சூழலில்தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்தார். படம் மெகா ஹிட்டானது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்பட்டது. ஜெயிலரின் வெற்றி ரஜினிக்கு ரொம்பவே உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

வேட்டையன்: ஜெயிலர் வெற்றிக்கு பிறகு வேட்டையன் படத்தில் நடித்துவருகிறர் ரஜினிகாந்த். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் ரஜினியின் கரியரில் தி பெஸ்ட்டாக அமைவதற்கான அத்தனை அறிகுறிகளும் டைட்டில் டீசரிலேயே தெரிகிறது என்று ரஜினியின் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

குட்டி பத்மினி பேட்டி: இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி ரஜினிகாந்த் குறித்து பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோவில், "எனக்கு ரஜினிகாந்த்தை அறிமுகப்படுத்தி வைத்தது கமல் ஹாசன். அப்போதிருந்தே நான், ரஜினி, கமல் எல்லாம் நண்பர்களாகிவிட்டோம். எங்கள் குரூப்பில் நான் ஓரளவு நன்றாகவே சம்பாதித்துகொண்டிருந்தேன். அப்போது எனக்கு கிடைக்கும் 100 ரூபாயில் நான், ரஜினி, கமல் மற்றும் சில நண்பர்கள் டீ குடித்தும், ஸ்நாக்ஸ் சாப்பிட்டும் நேரத்தை கழிப்போம்.

ஸ்ரீப்ரியாவின் சேட்டை: ரஜினிகாந்த் ரொம்பவே கூச்ச சுபாவம் உடையவர். அவரிடம் ஸ்ரீப்ரியாதான் அடிக்கடி வம்பிழுப்பார். அப்படி ஒருமுறை பாலசந்தர் படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி குடிக்கிற காஃபியில் ஸ்ரீப்ரியா எதையோ கலந்துகொடுத்துவிட்டார். ரஜினிகாந்த்தும் அதை குடித்துவிட்டார். அந்த காஃபியை குடித்துவிட்டு ஷாட்டுக்கு சென்ற ரஜினியால் வாயையே திறக்க முடியவில்லை. இருந்தாலும் எப்படியோ டயலாக்கை சொல்லி முடித்துவிட்டார். ஷாட் முடிந்ததும் ஸ்ரீப்ரியாவிடம் வந்த ரஜினிகாந்த், எதற்காக இப்படிலாம் செய்றீங்க என்று செல்லமாக சண்டைப்போட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X