பாலிவுட்டில் ஒரு சில்க்?.. மாற்றான் தந்தையால் அந்த கொடூரத்திற்கு ஆளான நடிகை லைலா கான்

மும்பை: சில கதைகள் காலம் கடந்தும் மனதை அலைக்கழிக்கும். பாலிவுட் நடிகை லைலா கானின் கதை அத்தகையது. ரேஷ்மா படேல் என்ற இயற்பெயருடன் 1978-ல் பிறந்தார்.

2008-ல் 'வஃபா: எ டெட்லி லவ் ஸ்டோரி' மூலம் லைலா இந்தி திரையுலகில் பழம்பெரும் நடிகர் ராஜேஷ் கன்னாவுடன் அறிமுகமானார். இப்படம் வணிக ரீதியாகத் தோல்வியடைந்தாலும், கவர்ச்சிகரமான காட்சிகளாலும், சுமார் 20 வயது லைலாவுக்கும் 60 வயதுக்கும் மேற்பட்ட ராஜேஷ் கன்னாவுக்குமான பெரிய வயது வேறுபாட்டாலும் சர்ச்சைகளை கிளப்பியது. திரையில் இவர்களது தோற்றம் மக்கள் கவனத்தை ஈர்த்து பெரும் விவாதத்தை உண்டாக்கியது. குறிப்பாக இருவருக்கும் இடையிலான நெருக்கமான காட்சிகள் அப்போது பெரும் பரபரப்பான பேச்சை உருவாக்கியது.

Laila Khan Murder Case Profile And Tragic End In Indian Cinema - Throw Back
Photo Credit:

ஐந்து கொலை: சில படத்திற்குப் பிறகு லைலாவுக்கு சினிமா வாய்ப்புகள் அமையவில்லை; அவர் திரையுலகில் இருந்து திடீரென காணாமல் போனார். பின்னர் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், காஷ்மீரில் இருந்து காணாமல் போனதாகவும் தகவல்கள் பரவி பல யூகங்களை உருவாக்கின. 2011 பிப்ரவரி 7 அன்று ஒரு சோகமான உண்மை வெளிப்பட்டது. லைலா கானும், அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். விசாரணையில், சொத்து தகராறு காரணமாக லைலாவின் மாற்றாந்தந்தையும் (அதாவது, தாயின் மூன்றாவது கணவர்) பர்வேஸ் டாக் இந்தக் கொலைகளைச் செய்தது அம்பலமானது. அவருக்கு நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு தண்டனை கிடைத்தது.

Laila Khan Murder Case Profile And Tragic End In Indian Cinema - Throw Back
Photo Credit:

தீர்ப்பு: கடந்த, 2024 மே 9 அன்று, மும்பை நீதிமன்றம் பர்வேஸ் டாக்கை கொலை மற்றும் ஆதாரங்களை அழித்த குற்றங்களுக்காகக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. இதன் மூலம் லைலா கானின் வாழ்க்கை ஒரு சோகமான முடிவுக்கு வந்தது. நடிகை லைலா கான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐவரையும் கொடூரமாக கொலை செய்ததது தொடர்பான தகவல்கள் பலருக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியைக் கொடுத்தது. அதுவும், அவரது மாற்றாந்தந்தை மூலமாகவே கொல்லப்பட்டது என்ற தகவல் மொத்த பாலிவுட்டையும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது. குறிப்பாக சொத்துக்காக மொத்தம் ஐந்து கொலைகளை எப்படித்தான் ஒருவருக்கு செய்ய மனம் வந்ததோ என்ற கேள்வியை பலரும் எழுப்பினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X