மும்பையில் ஓவர் பார்ட்டி?.. இங்கே தமிழ் மட்டும்தான்.. அட ஸ்ரீதேவி ஓபனா போட்டு உடைச்சிருக்காங்களே
சென்னை: இந்திய அளவில் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி. தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர். அவர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு குஷி கபூர், ஜான்வி கபூர் என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஜான்வி கபூரும் பிரபலமான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தெலுங்கில் நடித்துவிட்ட ஜான்வி விரைவில் தமிழிலும் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த அவர் பிறகு ஹீரோயினாக அறிமுகமானார். ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோருடன் ஜோடியாக நடித்தவர் தனது திறமையால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்தார். அவர் நடித்த படங்கள் அனைத்தும் வரிசையாக ஹிட்டடித்துக்கொண்டே இருந்தன. இதன் காரணமாக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தனது தடத்தை ஆழமாக பதித்தார்.

பாலிவுட்டில் பறந்த ஸ்ரீதேவியின் கொடி: ஹிந்தியிலும் அவர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்ததால் அவருக்கு அங்கும் வாய்ப்புகள் குவிந்தன. ஒருகட்டத்தில் அங்கு அவர் தவிர்க்க முடியாத ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார். இதன் காரணமாக தமிழை மொத்தமாக ஓரங்கட்டிய அவர் பாலிவுட்டிலேயே செட்டில் ஆனார். அப்போதுதான் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
துபாயில் உயிரிழப்பு: இதற்கிடையே தமிழில் ஸ்ரீதேவி கடைசியாக புலி படத்தில் நடித்தார். சூழல் இப்படி இருக்க கடந்த 2018ஆம் ஆண்டு தனது குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற அவர்; அங்கிருக்கும் நட்சத்திர ஹோட்டலின் குளியலறையில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியது. தேசிய கொடி போர்த்தி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஸ்ரீதேவி போல் அவரது மகள்களில் ஒருவரான ஜான்வியும் நடிகைதான். ஹிந்தியில் பிஸியாக இருக்கும் அவர் தெலுங்கில் அறிமுகமாகிவிட்டார். அடுத்ததாக தமிழிலும் விரைவில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீதேவியின் பேட்டி: இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவி கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் உயிரோடு இருந்தபோது அளித்த பேட்டியில், "பாலிவுட்டுக்கு சென்ற பிறகு நான் அதிகம் பார்ட்டியெல்லாம் செய்ததில்லை. நான் உண்டு எனது வேலை உண்டென்று இருப்பேன் அவ்வளவுதான். எனது கணவருக்கு தென்னிந்திய உணவுகள்தான் ரொம்பவே பிடிக்கும். அதேபோல் அவர் ரொம்பவே குடும்பத்துக்கு நேரமும், முக்கியத்துவமும் அதிகம் கொடுக்கக்கூடியவர். வீட்டில் இருப்பதுதான் பிடிக்கும்.
அவரும் இல்லை: அவரும் நிறைய பார்ட்டிகள் எல்லாம் செய்தது கிடையாது. குழந்தைகளை வளர்ப்பதில்கூட எனக்கும் அவருக்கும் ஒரே மாதிரியான எண்ணங்கள்தான் இருக்கின்றன. எனது குழந்தைகளுக்கு தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளும் நன்றாகவே புரியும். ஒரு சில வார்த்தைகளில் அவர்களுக்குள் கிண்டல் செய்துகொள்வார்கள். சென்னைக்கு வந்தால் தமிழில் மட்டும்தான் பேசுவார்கள். இங்கு வந்தால் தண்ணீரை கொண்டு வா என்று சொல்வார்கள். நான் எனது வீட்டில் வேலை செய்பவர்களிடம் பேசி பேசித்தான் என்னுடைய ஹிந்தியை மெருகேற்றிக்கொண்டேன். " என்றார்.


Click it and Unblock the Notifications











