என்னா பேச்சு பேசுனாரு பிரசாந்த் கிஷோர்.. கணிப்பு தலைகீழாக மாறியது
டெல்லி: 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று அரசியல் ஆய்வாளர் பிரசாந்த் கிஷோர் கணித்திருந்தார். hepk கட்சி 303 இடங்களைப் பெறும், அல்லது அதை விட அதிகமாக இருக்கும் என்று அவர் குறிப்பாக கணித்தார்.
இன்று, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் மதியம் 3.30 மணி நிலவரப்படி, பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையிலுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 290 இடங்களிலும், இந்தியா கூட்டணி சுமார் 240 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

தேர்தல் ரிசல்ட் வரும் முன்பாக பிரசாந்த் கிஷோர் பல ஊடகங்களுக்கு பேட்டியளித்து மோடி ஆட்சிதான் அடுத்து பிரமாண்டமாக அமையப்போகிறது என்று கற்பூரம் அடிக்காத குறையாக சத்தியம் செய்தார். ஆனால் பிரசாந்தின் கணிப்புக்கு மாறாக, ரிசல்ட் வந்துள்ளது. கரண் தாப்பர் தனது இன்டர்வியூவில் பாஜகவுக்கு அலை வீசவில்லை என்பதை சில ஆதாரங்களோடு எடுத்து வைத்தபோது பிரசாந்த் கிஷோர் டம்ளரிலிருந்து தண்ணீரை எடுத்து குடித்தார். ஆனால் பிற ஊடகங்கள் இதுபோன்ற குறுக்கு கேள்விகளை அவரிடம் வைக்கவில்லை. ஆனால் கரண் தாப்பர் கேட்ட கேள்விதான் இப்போது நிஜமாக நடந்துள்ளது.
பிரசாந்த் கிஷோர் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் போல பேசி வந்தார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் அவர் மோடி, மம்தா, ஸ்டாலின் என பல தலைவர்களுடன் தேர்தல் வியூக வகுப்பில் பணியாற்றியவர் என்பதால் அவர் சொல்வதில் உண்மையிருக்கும் என்று பலர் நினைத்தனர். ஆனால் யோகேந்திர யாதவ் சொன்னது நடந்ததே தவிர கிஷோர் சொன்னது அல்ல.


Click it and Unblock the Notifications











