Lokesh Kanagaraj - கமலுக்கு மட்டுமல்ல இவருக்கும் லோகேஷ் கனகராஜ் வெறித்தனமான ரசிகர்.. யார் தெரியுமா?

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) கமல் ஹாசனுக்கு மட்டுமின்றி மற்றொருவருக்கு லோகேஷ் கனகராஜ் வெறித்தனமான ரசிகர் என்பது தெரியவந்திருக்கிறது.

வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் தனது வேலையை உதறிவிட்டு மாநகரம் படத்தை இயக்கினார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவர் கோலிவுட்டில் மிகப்பெரிய ரவுண்ட் வருவார் என பலரின் நம்பிக்கையையும் பெற்றார்.

Lokesh Kanagaraj is a hardcore fan to Anjathey Movie and director Mysskin

பொய்த்துப்போகாத நம்பிக்கை: அந்த நம்பிக்கை பொய்த்துபோகாதபடி அடுத்த படத்தை கார்த்தியை வைத்து இயக்கினார் லோகேஷ். கைதி படம் ஒரு இரவில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டிருந்தாலும் அனுபவம் வாய்ந்த இயக்குநர் எப்படி இயக்குவாரோ அப்படி இருந்தது லோகேஷின் இயக்கம். முதல் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற சூழலில் இரண்டாவது படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

மாஸ்டர் தி ப்ளாஸ்டர்: இதனையடுத்து விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்த லோகேஷ் அதுவரை யாரும் பார்க்காத விஜய்யை திரையில் காண்பித்தார். இந்தப் படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. குறிப்பாக படத்தில் விஜய்யின் பெயருக்கான விரிவாக்கத்தை சொல்லாதது, விஜய்க்கான் ப்ளாஷ்பேக் இல்லாதது என மாஸ்டர் படத்தில் லோகேஷின் ஐடியா ரசிகர்களுக்கு புதுமையாகவே இருந்தது.

மாஸ் காட்டிய விக்ரம்: மாஸ்டருக்கு பிறகு கமல் ஹாசனுடன் இணைந்தார் லோகேஷ். தான் எவ்வளவு பெரிய கமல் ஹாசனின் ரசிகர் என்று பலமுறை பதிவு செய்திருக்கும் அவர் கமலை வைத்து எந்த மாதிரியான படத்தை இயக்கப்போகிறார் என்ற ஆவல் ஒட்டுமொத்த திரையுலகுக்கும் இருந்தது. அந்த ஆவலை பொய்யாக்காதபடி லோகேஷ் விக்ரம் படத்தை தரமாக உருவாக்கியிருந்தார். மேலும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என்பதையும் விக்ரம் படத்திலிருந்து ஆரம்பித்து வைத்தார். அது இப்போது அவ்வளவு பெரிய ட்ரெண்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Lokesh Kanagaraj is a hardcore fan to Anjathey Movie and director Mysskin

லியோ ஷூட்டிங் ஓவர்: இப்படி வரிசையாக நான்கு படங்கள் ஹிட் கொடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் ஐந்தாவதாக விஜய், மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்டோரை வைத்து லியோ படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது. இந்தப் படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் வருமா என்ற எதிர்பார்ப்பு பலரிடம் எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் லோகேஷ் கனகராஜ் கமல் ஹாசனின் வெறித்தனமான ரசிகர் மட்டுமில்லை மற்றொருவரின் ரசிகரும்கூட என தெரியவந்திருக்கிறது.

மிஷ்கின்: அதாவது மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படம் லோகேஷ் கனகராஜுக்கு ரொம்பவே பிடிக்குமாம். அதனை மிஷ்கினிடமும் அடிக்கடி சொல்லியிருக்கிறாராம். அதுமட்டுமின்றி கைதி படத்தில் நரேனை நடிக்க வைத்ததற்கு காரணமே அஞ்சாதே படம்தான். கைதி ஷூட்டிங் போய்க்கொண்டிருந்த சமயத்தில் ஒருமுறை மிஷ்கினிடம் நரேன், "டேய் என்னடா உன்னை பற்றி அவன் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓயாம பேசிட்டே இருக்கான். உனக்கு பெரிய ரசிகனா இருக்காண்டா " என்றாராம். மேலும் இந்த விஷயத்தை ஏற்கனவே தெரிந்து வைத்ததால்தான் லியோ படத்தில் மிஷ்கினும் நடிக்க ஒத்துக்கொண்டாராம். இந்தத் தகவலை மிஷ்கினே ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X