Lokesh Kanagaraj - விஜய் சேதுபதியை என்னால் அவாய்ட் செய்யவே முடியவில்லை.. லோகேஷ் கனகராஜ்

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) விக்ரம் படத்திலிருந்து விஜய் சேதுபதியை என்னால் அவாய்ட் செய்யவே முடியவில்லை என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார்.

மாநகரம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் இரண்டாவது படமாக கைதியை இயக்கினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.. கைதி படம் ஒரு இரவில் நடப்பதுபோல் திரைக்கதையை அமைத்து அனுபவம் வாய்ந்த இயக்குநர் எப்படி இயக்குவாரோ அப்படி இருந்தது லோகேஷின் இயக்கம். முதல் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற சூழலில் இரண்டாவது படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து அவர் இயக்கிய மாஸ்டர் படமும் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.

Lokesh Kanagaraj Talks about Vijay Sethupathi Character in Vikram Movie

மாஸ் காட்டிய விக்ரம்: மாஸ்டருக்கு பிறகு கமல் ஹாசனுடன் இணைந்தார் லோகேஷ். தான் எவ்வளவு பெரிய கமல் ஹாசனின் ரசிகர் என்று பலமுறை பதிவு செய்திருக்கும் அவர் கமலை வைத்து எந்த மாதிரியான படத்தை இயக்கப்போகிறார் என்ற ஆவல் ஒட்டுமொத்த திரையுலகுக்கும் இருந்தது. அந்த ஆவலை பொய்யாக்காதபடி லோகேஷ் விக்ரம் படத்தை தரமாக உருவாக்கியிருந்தார். மேலும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என்பதையும் விக்ரம் படத்திலிருந்து ஆரம்பித்து வைத்தார். அது இப்போது பெரும் ட்ரெண்டாகியிருக்கிறது.

விஜய் சேதுபதியுடன் க்ளோஸ்: லோகேஷ் கனகராஜ் எல்லோரிடமும் ஈகோ எதுவும் பார்க்காமல் பழகக்கூடியவர். அப்படி அவர் நெருங்கி பழகும் திரைத்துறையை சேர்ந்தவர்களில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். சேது அண்ணா சேது அண்ணா என வாஞ்சையோடுதான் அழைப்பார் லோகேஷ். இந்தச் சூழலில் விக்ரம் படத்தில் அவரை நடிக்க வைக்க வேண்டாம் என முடிவெடுத்து பிறகு அவாய்ட் பண்ண முடியாமல் சேதுபதியையே நடிக்க வைத்திருக்கிறார்.

என்ன நடந்தது: அதாவது மாஸ்டர் படத்தில் பணியாற்றிய பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்தால் ரிப்பீட் ஆகிற மாதிரி இருக்கும் என எண்ணியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதன் காரணமாக விஜய் சேதுபதியிடம் இந்தப் படத்தில் நீங்கள் வேண்டாம் அண்ணா. நாம் வேற ஒன்னு பண்ணுவோம் சொல்லிவிடு சந்தனம் கேரக்டருக்கு ராகவா லாரன்ஸிடம் பேசியிருக்கிறார். அவர் ஒத்துக்கொண்டாலும் சில காரணங்களால் லாரன்ஸ் இதில் நடிக்கவில்லை.

Lokesh Kanagaraj Talks about Vijay Sethupathi Character in Vikram Movie

சரி வேறு யாரையாவது நடிக்க வைக்கலாம் என்ற முடிவில் அந்த கேரக்டரை இன்னமும் விரிவு செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அப்போது ஆட்டோமேட்டிக்காக விஜய் சேதுபதிதான் இவரது மைண்டில் வந்திருக்கிறார். அதுமட்டுமின்றி கமல் ஹாசனுக்கு எதிராக ஒரு கேரக்டர் உருவானால் அவர் எப்படி நடிக்க வேண்டும் என யோசித்த லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதியை கடைசியில் அவாய்டே பண்ண முடியாமல் அவரே நடித்தால்தான் சரியாக இருக்கும் என முடிவு செய்து படத்துக்கு உள்ளே கொண்டு வந்திருக்கிறார். இந்தத் தகவலை லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

லியோ: இப்படி வரிசையாக நான்கு படங்கள் ஹிட் கொடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் ஐந்தாவதாக விஜய், மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்டோரை வைத்து லியோ படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்தது. இந்தப் படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸில் வருமா என்ற எதிர்பார்ப்பு பலரிடம் எழுந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X