பாக்யராஜிடம் இருக்கும் ஒரே பிரச்னை அதுதான் - வாலி கலகல பேச்சு
சென்னை: மறைந்த பாடலாசிரியர் வாலி நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் குறித்து பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் பாக்யராஜ். பாக்யராஜின் கதை, திரைக்கதையில் பாரதிராஜா படங்களையும் இயக்கியிருக்கிறார். அந்த அளவுக்கு பாக்யராஜ் மீது பாரதிராஜாவுக்கு பெரும் மதிப்பும், நம்பிக்கையும் உண்டு.

இயக்குநராக அறிமுகமான பாக்யராஜ்
பாரதிராஜாவிடம் நீண்ட காலம் உதவி இயக்குநராக இருந்துவிட்டு சுவரில்லாத சித்திரங்கள் படம் மூலம் இயக்குநராக அற்முகமானார் பாக்யராஜ். அந்தப் படத்தில் அவரே நடிக்கவும் செய்தார். முதல் படமே மெகா ஹிட்டாக பாக்யராஜை நம்பி பணம் போட அனைத்து தயாரிப்பாளர்களும் ரெடியாகினர். அதனை பயன்படுத்திக்கொண்ட அவர் மௌன கீதங்கள், ஒரு கை ஓசை, அந்த 7 நாள்கள், தூறல் நின்னு போச்சு, டார்லிங் டார்லிங், டார்லிங், இன்று போய் நாளை வா என வரிசையாக ஏராளமான படங்கள் இயக்க அந்தப் படங்கள் மெகா ஹிட்டாகின.

திரைக்கதை மன்னனான பாக்யராஜ்
பாக்யராஜ் திரைப்படங்களில் மேக்கிங் எவ்வளவு நுட்பமாக இருக்குமோ அந்த அளவுக்கு திரைக்கதையும் அட்டகாசமாக இருக்கும் என பலர் கூறுவார்கள். அவரது திரைக்கதையை பார்ப்பதற்கு மிக எளிதாக இருந்தாலும் அதுபோல் யாராலும் திரைக்கதையை அமைக்க முடியாது எனவும் திரையுலகினர் வியப்பர். மேலும் அவர் திரைக்கதை மன்னன் எனவும் புகழப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இந்தி படத்தையும் இயக்கியிருக்கிறார் பாக்யராஜ். அவரிடம் உதவியாளராக பணியாற்றியவர்தான் பார்த்திபன்.

இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த இயக்குநர் பாக்யராஜ்
இயக்குநர், நடிகர் என புகுந்து விளையாடிய பாக்யராஜ் இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். ஒரு படத்தின் கம்போஸிங்கின்போது இளையராஜாவுடன் ஏற்பட்டபிரச்னையால்தான் பாக்யராஜ் இசையமைப்பாளர் ஆனார் என்ற தகவலும் திரையுலகில் உண்டு. இசையமைப்பாளரான பாக்யராஜ இது நம்ம ஆளு, பவுனு பவுனுதான்,ஞானப்பழம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவர் இசையமைப்பில் பாடல்களும் ஹிட்டாகியுள்ளன.

பாக்யராஜிடம் இருக்கும் பிரச்னை இதுதான்
இசையமைப்பாளராக பாக்யராஜ் ,முடிவெடுத்த பிறகு அதற்கான தீவிர பயிற்சியில் இறங்கினாராம். எனவே ஹார்மோனியத்துடன்தான் எப்போதுமே இருப்பாராம். ஒருவழியாக இசையை முறையாக கற்றுக்கொண்டு முழுநேர இசையமைப்பாளராகவும் மாறிவிட்டார். அந்த சமயத்தில் பாக்யராஜுக்கு பாடல் எழுதுவது பெரும்பாலும் வாலிதான். அப்படி வாலி பாடல் எழுத பாக்யராஜுடன் அமரும்போது அநியாயத்துக்கு சிகரெட் அடிப்பாராம் பாக்யராஜ்.
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத வாலி தனது மைத்துனரிடம் இனி பாக்யராஜ் இசையில் பாடலே எழுதக்கூடாது என்று கூறுவாராம். இதனை கேள்விப்பட்டவுடன் பெரிய தொகையை கவரில் வைத்து பாக்யராஜ் கொடுத்துவிடுவாராம். அதனைப் பார்த்துவிட்டு தனது முடிவிலிருந்து மாறிவிடுவாராம் வாலி. இதனை பாக்யராஜை மேடையில் வைத்துக்கொண்டே வாலி கலகலப்பாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











