விஜய் கணக்கு தப்பவில்லை.. கேட்டதும் மறுக்க முடியவில்லை.. செம அனுபவம் பகிர்ந்த வைரமுத்து

சென்னை: தமிழ் திரையிசையில் வைரமுத்து தவிர்க்க முடியாதவர். ஏராளமான பாடல்களை எழுதியிருக்கும் அவர் கிட்டத்தட்ட 7 முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். அவரது வரிகள் இலக்கியத்தன்மையோடும் இருக்கும், சினிமாவுக்கு ஏற்றபடியும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதும் தொடர்ந்து பாடல்கள் எழுதிவரும் அவர்; அவ்வப்போது தனது திரையுலக அனுபவங்களை ட்விட்டரில் பகிர்ந்துவருகிறார். அந்தவகையில் அவர் தற்போது போட்டிருக்கும் ட்வீட் ட்ரெண்டாகியுள்ளது.

பாடலாசிரியர் வைரமுத்துவுக்கென்று ரசிகர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன், வித்யாசாகர், ஜிவி பிரகாஷ் என பல இசையமைப்பாளர்களுடன் வேலை செய்திருக்கும் அவர் ஏழு முறை தேசிய விருது பெற்றிருக்கிறார். அதுமட்டுமின்றி கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் உள்ளிட்ட நாவல்களையும், பல சிறுகதைகள், கவிதைகள் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

throwback stories vijay vairamuthu

வைரமுத்து ட்வீட்: இப்போது அவர் சில படங்களுக்கு பாடல்கள் எழுதிவருகிறார். இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவான ஷாஜகான் படம் பற்றி ட்வீட் போட்டிருக்கும் வைரமுத்து, “விஜய் நடித்தஷாஜகான் படத்துக்கு எல்லாப் பாடல்களையும் எழுதி முடித்தேன் மெல்லினமே' மின்னலைப் பிடித்து' அச்சச்சோ புன்னகை' ஆகிய பாடல்கள் இசை இலக்கியமாய் அமைந்தது கண்டுஆனந்த ஊஞ்சலில் ஆடினேன்

இயக்குநர் வந்தார்: ஓர் அதிகாலையில் ஒருகால் காருக்குள்ளும் மறுகால் தரையிலும் இருந்த பரபரப்பில் அந்தப் படத்தின் இயக்குனர் ரவி ஓடிவந்தார் 'படத்துக்கு இன்னொரு பாட்டு வேண்டும்' என்றார் எல்லாப் பாட்டும் முடிந்து விட்டதே; இனி என்ன பாட்டு' என்றேன் 'எல்லாப் பாட்டும் நல்ல பாட்டாகவே இருக்கு கவிஞரே; ஒரே ஒரு குத்துப்பாட்டு வேண்டும்' என்றார் (கூத்துப் பாட்டு என்பதுதான் மொழிச் சோம்பேறிகளால் குத்துப் பாட்டு என்றாகிவிட்டது)

மறுக்க முடியவில்லஈ: தயங்கினேன் விஜய் சொல்லி அனுப்பினார்' என்றார் கதாநாயகன் சொன்னபிறகு மறுக்க முடியவில்லை; எழுதிக் கொடுத்தேன் அரங்கம் சென்று பார்த்தால் இலக்கியப் பாடல்களுக்கு மெளனமாய் இருந்த கொட்டகை கூத்துப் பாடலுக்குக் குலுங்கியது விஜய் கணக்கு தப்பவில்லை இசைஇலக்கியம் இன்புறுவதற்கு; கூத்துப் பாட்டு கொண்டாடுவதற்கு அந்தப் பாட்டு எந்தப் பாட்டு தெரியுமா?

அமைதியாகும் வைரமுத்து: 'சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன் கறுத்த கோழி மிளகுபோட்டு வறுத்து வச்சிருக்கேன்'” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கிடையே வைரமுத்து மீது சில பாடகிகள் பாலியல் புகாரை முன்வைத்தனர். ஆனால் அதெல்லாம் அவதூறுதான் என்று கவிஞரின் ரசிகர்கள் கூறுகிறார்கள். அதேசமயம் இத்தனை நாள் அமைதியாக இருந்த வைரமுத்து அண்மையில் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதனைப் பார்த்த பலரும் சுசித்ராவுக்கு மறைமுகமாக கவிஞர் பதிலடி கொடுத்துவிட்டார் என்று கமெண்ட்ஸ் செய்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X