ரஜினியிடம் எப்போதும் கேட்கமாட்டேன்.. ஓபனாக சொன்ன வைரமுத்து.. இவ்வளவு நடந்திருக்கா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அடுத்ததாக அவரது மகள் இயக்கத்தில் உருவான லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோல் ஏற்றிருந்தார். ஆனால் அந்தப் படம் வந்த இடம் தெரியாமல் போனது. இப்போது கூலி படத்தில் நடித்துவரும் அவர்; த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது.

ரஜினிகாந்த் என்ற பெயர் இந்தியா முழுவதும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. இதுவரை 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் ரஜினிகாந்த் பெரும்பாலும் ஹிட் படங்களையே கொடுத்திருக்கிறார். அவரது நடை, உடை, பாவனைக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. முக்கியமாக சாமானியர்கள் முதல் ஸ்டார்கள்வரை ரஜினிகாந்த்தைத்தான் தங்களது முதல் ஸ்டாராக எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவரது தாக்கம் விலக்க முடியாதது.

throwback stories rajinikanth vairamuthu

சின்ன சறுக்கல்: ரஜினிகாந்த் இடையில் சின்னதாக சறுக்கினார். அவர் நடித்த தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் சரியாக போகவில்லை. அதனையடுத்து அவரது சூப்பர் ஸ்டார் நாற்காலி தடுமாறிவிட்டதாக கூறினர். ஆனால் அதெல்லாம் தடுமாறவில்லை என்பதை ஜெயிலர் படத்தில் நிரூபித்தார் ரஜினி. அப்படம் உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அடுத்ததாக தனது மகள் இயக்கத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த லால் சலாம் படம் பயங்கரமாக வாரிவிட்டது.

வேட்டையன், கூலி: இப்போது அவர் வேட்டையன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கியிருக்கிறார். அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படம் கண்டிப்பாக பெரிய சம்பவமாக செய்யும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க ரஜினிகாந்த்தை வைத்து படம் தயாரிக்க பலரும் காத்திருக்கிறார்கள்.

மறுத்த வைரமுத்து: ரஜினியும் தனக்கு நெருக்கமானவர்களின் தயாரிப்பில் படம் நடிப்பதை விரும்புவார். நடிகர் செந்திலிடம்கூட நீங்கள் படம் தயாரியுங்கள் கால்ஷீட் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். இந்தச் சூழலில் வைரமுத்துவிடமும் படம் தயாரிக்க சொன்ன சம்பவம் தெரியவந்திருக்கிறது. இதுதொடர்பாக வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், "'கொடிபறக்குது' படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது 'சேலைகட்டும் பெண்ணுக்கொரு
வாசம் உண்டு' பாடலை எழுதி எடுத்துக்கொண்டு பாரதிராஜாவைப் பார்க்கப் போயிருந்தேன்.'

ரஜினியின் ஆச்சரியம்: ரஜினியை ஒப்பனையில் பார்த்ததும் உள்ளம் மகிழ்ந்தேன் படப்பிடிப்புத் தளங்களில் பார்க்கமுடியாத என்னைப் பார்த்ததும் ரஜினி தன் உடல்மொழியில் ஆச்சரியம் காட்டினார் காட்சிகளின் இடைவெளியில் அவரும் நானும் தனியானோம் என் தோளில் கைபோட்டுக்கொண்டே ஓர் ஓரமாய்ப் பொடிநடை போனார் உறுதியான சொற்களில் என்னைப் பார்த்துச் சொன்னார்: "இளையராஜாவுக்கு ஒரு படம் பண்ணிவிட்டேன்; பாரதிராஜாவுக்கு இந்தப்படம் நடித்துக்கொண்டிருக்கிறேன்.

நான் தயார்: அடுத்து நீங்கள்தான். எப்போது என்னை வைத்துப் படம் செய்யப் போகிறீர்கள்; நான் தயார்" என்றார் ஒன்றும் பேசாமல் நின்றேன் சில கணங்கள் சென்றபிறகு மீண்டும் தன்னிலை அடைந்தேன் "மிக்க நன்றி இப்படிக் கேட்பதற்கே பேருள்ளம் வேண்டும் படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால் நான் உங்களைத்தான் அணுகுவேன் அவர் கைகளைப் பற்றிக்கொண்டு தழுதழுத்தேன.

மறந்திருக்கமாட்டார்: இன்றுவரை அந்த வாக்குறுதி அப்படியே இருக்கிறது அவரும் அதை மறந்திருக்க மாட்டார் ஆண்டு பலவாக அந்த வார்த்தைகளை நான் அசைபோட்டே வந்திருக்கிறேன் நண்பர்களாய் இருப்பது புனிதமானது; வியாபாரிகளாய் இருப்பது கணிதமானது கணிதம் புனிதத்தைக் கெடுத்துவிடும்; கெடவிடமாட்டேன் அதனால், இப்போது மட்டுமல்ல எப்போதும் கேட்கமாட்டேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X