Rajini - கவிஞரின் காலை அளவெடுத்த ரஜினிகாந்த்.. மனுஷன் இப்படியுமா இருப்பார்?.. ரசிகர்கள் ஆச்சரியம்
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) கவிஞர் வைரமுத்துவின் காலை ரஜினிகாந்த் அளவெடுத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் நிவாரண மருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை படம் உலகம் முழுவதும் வசூலித்தது.

வேட்டையன்: ஜெயிலர் படத்துக்கு பிறகு அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்ச் வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். இப்படி ரஜினிகாந்த் இப்போதும் படுபிஸியாக இருப்பதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியம்தான் படுகிறது. கவிஞர் வைரமுத்து ரஜினிக்கு, 'மீசை வைத்த குழந்தையப்பா' என்று ஒரு பாடலில் எழுதியிருப்பார். அதற்கேற்றபடி குழந்தைபோல் படு சுறுசுறுப்பாக இருக்கிறார் ரஜினி.
காலை அளந்த ரஜினி: இந்த சூழலில் கவிஞர் வைரமுத்துவின் காலை ரஜினிகாந்த் அளவெடுத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது பாபா பட சமயத்தின்போது ஒரு பாடல் பற்றி விவாதிக்க தனது வீட்டுக்கு வைரமுத்துவை அழைத்திருக்கிறார் ரஜினி. வீட்டுக்கு வைரமுத்துவை முழுதாக கவனித்த ரஜினிகாந்த் அவரது காலை பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார்.
வைரமுத்து ஏன் எனது கால்களை பார்க்கிறீர்கள் என கேட்க இல்லை போட்டிருக்கும் உடைக்கும், காலணிக்கும் சம்பந்தம் இல்லாதது போல் இருக்கிறதே என சொல்லி தனது உதவியாளரை அழைத்து வைரமுத்துவின் கால்களை அளவு எடுத்திருக்கிறார். விவாதம் எல்லாம் முடிந்த பிறகு வைரமுத்து ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டூடியோவுக்கு சென்றுவிட்டு போய் பார்க்கையில் பல புதிய காலணிகள் அங்கு இருந்தனவாம். அதனை ரஜினி அனுப்பி வைத்திருக்கிறார். இந்த விஷயத்தை வைரமுத்து ஒரு விழாவில் பேசுகையில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











