உடலுறவுக்கு கட்டாயம் இது தேவை.. ஷங்கர் பட நடிகர் கொடுத்த முக்கியமான டிப்ஸ்!
சென்னை: தமிழில் தற்போது வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்க கூடிய படம் மகாராஜா. விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான இந்த படத்தை குரங்கு பொம்மை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நித்திலன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு சினிமா விமர்சகர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவரும் நல்ல கருத்துக்களை கூறி வருவதால் படம் பார்த்துச் செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

கடந்த 14 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 480 திரையரங்குகளிலும் ஆந்திராவில் 380 திரையரங்குகளிலும் கேரளாவில் 165 திரையரங்குகளிலும் கர்நாடகாவில் 160 திரையரங்குகளிலும் வட இந்தியாவில் 60 திரையரங்குகளிலும் வெளிநாடுகளில் 700 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் மகாராஜா படம் ரூபாய் கிட்டத்தட்ட 21.45 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளது. மக்கள் ஆதரவு தொடர்ந்து இந்த படத்திற்கு இருப்பதால் இந்த படம் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வெளியான படங்களிலேயே அதிக வசூலை குவித்த படங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாய்ஸ் மணிகண்டன்: மகாராஜா திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தவர் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான மணிகண்டன். தனது கவனம் ஈர்க்கும் நடிப்பால் தற்போது மணிகண்டன் குறித்த பேச்சுக்கள் இணையத்திலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் மணிகண்டன் கொடுத்த பேட்டிகளில் பேசியது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

நாள் முழுக்க குடி: அதில் அவர் பாய்ஸ் படத்துக்கு பிறகு நான் ஒரு சில படங்களில் நடித்தேன். யுகா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது எனது அப்பா இறந்துவிட்டார். அப்பாவால் கொஞ்சம் கடனாகிவிட்டது. நான் வேலைக்கு போய் அந்த கடனை ஓரளவுக்கு அடைத்தேன். அந்த காலகட்டம் எனது வாழ்க்கையில் மிகவும் மோசமான காலகட்டம் தான். எனக்கு சொந்த வாழ்க்கை நான் அதிகப்படியான துயரம் ஏமாற்றம் தோல்வியில் கஷ்டமான இப்படியானவற்றை தான் அனுபவித்திருக்கிறேன். கூடா நட்பால் ஒரு காலத்தில் பகலெல்லாம் குடித்துக்கொண்டும் இருந்தேன்.

ஃபேஸ் புக் காதல்: நிறையபேரைக் காதலித்திருக்கிறேன். எனக்கு இப்போது 42 வயதாகி விட்டது. நான் சரியாக இருக்கிறேனா இல்லையா என்பது கூட எனக்கு தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு விஷயத்தில் நான் சரியாக இல்லை என்பது மட்டும் புரிகிறது. ஃபேஸ் புக்கில் ஒரு பெண்ணுடன் பழகி அந்தப் பெண்ணை பார்க்க கடன் எல்லாம் வாங்கி மலேசியா சென்றேன். அங்கு நான்கு நாட்கள் தான் இருந்தேன். அந்த நான்கு நாட்களில் அந்தப் பெண்ணால் அதிகப்படியான டார்ச்சர்களை நான் சந்திக்க நேர்ந்தது. அந்தப் பெண் எப்போதும் குடித்துக் கொண்டே இருந்தார்.

உடலுறவுக்கு இது ரொம்ப முக்கியம்: நாங்கள் தங்கி இருந்த இடத்தில் ஒரு போன் கூட கிடையாது. கடன் வாங்கி கொண்டு சென்ற பணத்தை எல்லாம் இழந்து எப்படியோ அங்கிருந்து தப்பித்து வந்து விட்டேன். நாம் உடலுறவு கொள்ளும் போது காதல் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். நான் மலேசியா சென்ற காலகட்டத்தில் நான் ரொம்ப வெறுமையாக இருந்ததால்தான் ஏதாவது ஒன்று கிடைக்காதா என யோசித்து மலேசியாவிற்குச் சென்றேன். ஆனால் நான் எதிர்பார்த்து சென்ற விஷயம் ஒன்று அங்கு நடந்தது வேறொன்று இவ்வாறு மணிகண்டன் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











