Manoj Bharathiraja: இதை கவனிங்க.. என் அப்பா ஒரு.. புட்டு புட்டு வைத்த மனோஜ் பாரதிராஜா.. செம எமோஷனல்
சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று அதாவது மார்ச் 25ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 48. தற்போது அவரது உடல் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு இன்று மாலையே இறுதிச் சடங்குகள் நடத்தப்படவுள்ளது. சோகத்தின் உச்சத்தில் இருக்கும் பாரதிராஜாவுக்கு திரையுலகத்தினர் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பாரதிராஜா குறித்து, மனோஜ் பாரதிராஜா பழைய பேட்டியில் கூறிய விஷயங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் அந்த பேட்டியில் தனது குடும்பம் குறித்தும் குறிப்பாக தனது இளைய மகள் குறித்தும் பகிர்ந்துள்ளார். அதாவது, " இந்த பேட்டிக்கு நான் கிளம்பி வரும்போது எனது மகள் என்னை கலாய்த்து தான் அனுப்பினார். சீக்கிரம் வந்தால் சாப்பாடு கிடைக்கும், இல்லை என்றால் கிடைக்காது என்று கூறினார். நானும் எனது குழந்தைகளை எப்போதும் கலாய்த்துக் கொண்டுதான் இருப்பேன். எனது மூத்த மகள் கூட பரவாயில்லை, ஆனால் இளைய மகள் என்னை எல்லா இடங்களிலும் கலாய்த்து தள்ளுவார். பொது இடங்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டார், எப்போதும் கலாய்த்து விடுவார்.
அதேபோல் எனது மனைவி மட்டும் இல்லையென்றால் நான் என்றோ பைத்தியமாகி இருப்பேன். என்னை நம்பி வந்த ஜீவன் , எனது கஷ்டங்களிலும் துக்கங்களில் பங்கெடுத்தது மட்டும் இல்லாமல், நான் சரிவில், மன அழுத்தத்தில் இருந்த காலகட்டத்தில் என்னை மொத்தமாக மீட்டுக் கொண்டு வந்தார். எனது மனைவி மட்டும் இல்லை என்றால், இப்போது நான் இல்லை.

பாரதிராஜா: மேலும் அப்பாவைப் பற்றிக் கூறவேண்டும் என்றால், அப்பா ரொம்பவும் ஜாலியானவர். நகைச்சுவை உணர்வு அவருக்கு ரொம்பவும் அதிகம். கிண்டல் கேலிக்கு அளவே இருக்காது. மிகவும் இளகிய மனது கொண்டவர். சின்ன விஷயத்துக்கு கூட கண் கலங்கி விடுவார். அவர் வளர்ந்த குழந்தை, முதிர்ந்த குழந்தை, எப்போதும் அவர் மனதளவில் குழந்தைதான். இப்போதும் செம ஆக்டிவாக இருக்கிறார். வேலையில் மிகவும் சுறுசுறுப்பானவர்.
மனைவி: நான் திருமணம் செய்து கொண்ட பின்னர் எனக்கு படங்களே இல்லை. நானும் தனிக்குடித்தனம் வந்துவிட்டேன். இது மட்டும் இல்லாமல், எனது அப்பாவிடம் இது தொடர்பாக நான் எதுவும் பகிர்ந்து கொண்டது இல்லை. காரணம், அவரிடம் பலரும் நான் ஏன் படம் பண்ணவில்லை என்று கேள்வி கேட்பார்கள். அப்படி இருக்கும்போது, நான் எனது மனைவியிடம் மட்டுமே பகிர்ந்து கொள்வேன். எனது மனைவிதான் என்னை முற்றிலும் மீட்டுக் கொண்டுவந்தார்" என பேசியுள்ளார். அவரது பழைய பேட்டிகள் இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

முதலமைச்சர்: மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு பாரதிராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திரையுலகத்தினரும் அரசியல் தலைவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஆகியோர் நேரில் சென்று, அஞ்சலி செலுத்திவிட்டு, ஆறுதல் கூறினார்கள். இவரது மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



Click it and Unblock the Notifications











