வாழ்க்கையே போராட்டம்தான்.. அப்பாவுக்கு பயம்.. கண் கலங்கி மனோஜ் பாரதிராஜா கடைசியாக பேசியது இதுதான்

சென்னை: பாரதிராஜாவின் மகனான மனோஜ் நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்புதான் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அறுவை சிகிச்சைக்கு பிறகு வீட்டில் ஓய்வில் இருந்த அவருக்கு இந்த துயர நிகழ்வு நடந்திருக்கிறது. அவரின் இறுதி சடங்கு இன்று மாலை பெசன்ட் நகரில் இருக்கும் மின் மயானத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் அவர் கடைசியாக பேசியதை பார்த்து ரசிகர்கள் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.

பாரதிராஜா தனது மகனை தான் இயக்கிய தாஜ் மஹால் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். கண்டிப்பாக அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்து தனது மகனுக்கு திரையுலகில் பிரகாசமான வாழ்க்கை கிடைக்கும் என்றுதான் எதிர்பார்த்தார். ஆனால் அந்தப் படம் சரியாக போகவில்லை. இருப்பினும் படத்தின் பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தன. எனவே பாடல்களும், பாரதிராஜாவின் மகன் என்கிற அடையாளமும் அவருக்கு தொடர்ந்து வெளிச்சத்தை கொடுத்தது.

தொடர் முயற்சி: தாஜ் மஹால் படம் சரியாக போகாவிட்டாலும் எப்படியாவது திரைத்துறையில் தனது தந்தையின் பெயரை காப்பாற்றிவிட வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தார் மனோஜ். அதன் காரணமாக தனியாகவே நடிப்பதற்கு வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார். அதன்படி வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம் என வரிசையாக படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்களும் சரியாக போகவில்லை. பிறகு மீண்டும் பாரதிராஜா மனோஜை வைத்து ஈர நிலம் என்ற படத்தை இயக்கினார். அந்தப் படமும் தோல்வியைத்தான் சந்தித்தது.

Manoj Bharathiraja s last speech with teary eyes has become a trend

உதவி இயக்குநர்: இதற்கிடையே மனோஜ் நடிக்க வருவதற்கு முன்னர் பாரதிராஜாவிடம் ஒரு படம் உதவி இயக்குநராக வேலை செய்தார். அவரைத் தொடர்ந்து மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரிடமும் உதவி இயக்குநராக மாறினார். அந்த அனுபவத்தை அடிப்படையாக மார்கழி திங்கள் என்ற படத்தையும் இயக்கினார். ஆனால் அப்படமும் சரியாக போகவில்லை. நடிகராகவும், இயக்குநராகவும் வெல்ல முடியவில்லையே என்கிற ஏக்கம் மனோஜுக்கு நிறையவே இருந்தது. இது ஒருபக்கம் இருக்க மாநாடு, கொம்பன் உள்ளிட்ட படங்களில் குணசித்திர வேடத்தை ஏற்றார் அவர்.

மரணமடைந்த மனோஜ்: கடைசியாக அவர் ஸ்நேக் அண்ட் லாடர்ஸ் என்கிற வெப் சீரிஸில் நடித்திருந்தார். சூழல் இப்படி இருக்க அவருக்கு சில நாட்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை சென்னையில் செய்யப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் ஓய்வில் இருந்திருக்கிறார்.ஆனால் நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 48. இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மனோஜின் கடைசி பேச்சு: இந்நிலையில் மனோஜ் கடைசியாக பேசியது தொடர்பான வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது. மார்கழி திங்கள் பட இசை வெளியீட்டு விழாவில் உருக்கத்தோடு பேசிய அவர், "தமிழ்ச்செல்வன் படத்தில் வேலை பார்த்த பிறகு படம் இயக்குகிறேன் என்று அப்பாவிடம் சொன்னேன். ஆனால் அவரோ என்னை நடிக்க சொன்னார். முதலில் முடியாது என்று சொன்னேன்.பிறகு அவர் எப்படியோ கன்வின்ஸ் செய்துவிட்டார். தாஜ் மகால் படம் சரியாக போகவில்லை. அதற்கடுத்தும் ஒரு நடிகராக என்னால் ஜொலிக்க முடியவில்லை.

கண் கலங்கிய மனோஜ்: அதனைத் தொடர்ந்து படம் இயக்குகிறேன் என்று சொன்னேன். அப்போது அப்பாவுக்கு பயம்தான் இருந்தது. எங்கே இவன் இயக்குநராகவும் சொதப்பிடுவானோ என்ற பயம். ஏனெனில் எனது வாழ்க்கை போராட்டமாகத்தான் அமைந்தது. எந்த திசையிலோ சென்றுகொண்டிருந்தது. அப்பாவுக்கு அடுத்ததாக எனது மனைவிக்கும், மகள்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். எனது மனைவி ரொம்பவே நம்பினார் (கண் கலங்குகிறார்)" என்றார். அவரது இந்தப் பேச்சை பகிர்ந்து, இன்னும் கொஞ்ச காலம் மனோஜ் இருந்திருக்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X