Mansoor Ali Khan - மன்சூர் அலிகான் மட்டுமா தப்பா பேசுனாரு.. நடிகைகளை பேசியவர்களின் லிஸ்ட்ட பாருங்க
சென்னை: Mansoor Ali Khan Trisha Controversy (மன்சூர் அலிகான் த்ரிஷா சர்ச்சை) த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் பூதாகரமாக கோலிவுட்டில் வெடித்திருக்கிறது.
நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷாவை பற்றி ஆபாசமாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு எதிராக திரையுலகில் கடும் கண்டனங்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. தமிழ் திரையுலகம் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலிருந்து சிரஞ்சீவியும் த்ரிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவும் இட்டிருக்கிறது.

அலட்சியம்: இப்படி தொடர்ந்து எதிர்ப்புகளும், சிக்கல்களும் மன்சூர் அலிகானுக்கு வந்தாலும் அவர் இதுவரை மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. மாறாக என்னால் மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்றே பேசி வருகிறார். சூழல் இப்படி இருக்க மன்சூர் அலிகான் மட்டும் நடிகையை பற்றி இப்படி தரக்குறைவாக பேசவில்லை. இவருக்கு முன்னரே சிலர் பேசியிருக்கின்றனர். அந்த லிஸ்ட் இதுதான்.
ராதாரவி Vs நயன்தாரா: தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் நடிகவேள் எம்.ஆர்.ராதா. அவரது மகன் ராதாரவி. இவரும் கோலிவுட்டில் சீனியர் நடிகர். வார்த்தையிலும், நடத்தையிலும் பொறுப்பு இருக்க வேண்டிய அவரோ தன்னுடைய வார்த்தைகளில் நிதானம் தவறுபவர். அப்படி ஒருமுறை பட விழா ஒன்றில், 'முன்னாடி எல்லாம் பார்த்தவுடன் கும்பிடுவது போன்று இருப்பவர்களை சீதை வேஷத்துக்கு போட்டார்கள். இப்போதெல்லாம் பார்த்தவுடன் கூப்பிடுவது போன்று இருப்பவர்களையும் சீதை வேஷத்துக்கு போடுகிறார்கள்' என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரோபோ ஷங்கர் Vs ஹன்சிகா மோத்வானி: சின்னத்திரையில் தோன்றி பிறகு வெள்ளித்திரைக்கு வந்தவர் ரோபோ ஷங்கர். தனது காமெடி நடிப்பால் பலரையும் கவர்ந்தவர். ஆனால் அவரும் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கினார். ஒரு சினிமா மேடையில் ஹன்சிகா குறித்து பேசும்போது, "ஹன்சிகா மோத்வானி மெழுகு பொம்மைதான். மைதா மாவை பிசைந்து சுவற்றில் அடித்தால் ஒட்டிக்கொண்டது மாதிரி இருப்பார். படத்தின் ஒரு காட்சியில் ஒரு பொருளை தேடி அவரது காலை நான் தடவ வேண்டும். எப்படியாவது செய்துவிடலாம் என்று இருந்தேன். ஆனால் அவர் விடவில்லை" என்றார். அவரது இந்தப் பேச்சுக்கு பத்திரிகையாளர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.
கூல் சுரேஷ் Vs தொகுப்பாளினி: நடிகராக சில படங்களில் தோன்றி சிம்புவின் ரசிகராக அடையாளப்பட்டு தற்போது பிக்பாஸி சீசன் 7ல் கலந்துகொண்டிருக்கும் கூல் சுரேஷ்; மன்சூர் அலிகானின் சரக்கு பட விழாவில் ஒரு விவகாரத்தை செய்துவிட்டார். அதாவது பேசிக்கொண்டிருக்கும்போதே அருகில் இருந்த தொகுப்பாளினிக்கு மாலையை போட்டுவிட்டார்.
அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து கலங்கியபடி மன்னிப்பு கேட்டார். அதுமட்டுமின்றி அந்த விழாவிலேயே தொகுப்பாளினியிடம் மன்னிப்பு கேட்கும்படி மன்சூர் அலிகான் கூல் சுரேஷை வலியுறுத்தினார். அப்படி சொன்ன மன்சூர் அலிகானே தற்போது ஆபாசமாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்க முடியாது என்று சொல்லிவருகிறார்..


Click it and Unblock the Notifications











