விஷாலை விடுங்க.. குக்கூ படத்தால் அட்டகத்தி தினேஷ் சந்தித்த வேதனை.. மாரி செல்வராஜ் ஷேரிங்

சென்னை: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசான படங்களில் அதிருபதியான வெற்றியைப் பெற்ற படம் மதகத ராஜா. சுந்தர் சி இயக்கத்தில் விஷால் சந்தானம் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி கடந்த 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டு பின்னர் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அதன் பின்னர் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆனது.

இந்த படத்தின் ரிலீசுக்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விஷால் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அவரது கை மிகவும் நடுங்கியது. விஷாலின் இந்த நிலைமைக்கு காரணம் இயக்குனர் பாலா தான் என கூறப்பட்டது. அதாவது அவன் இவன் படத்தில் நடிக்கும் போது விஷாலை மாறு கண் பார்வை உடைய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் போது விஷாலுக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்சனைகளால் விஷால் சில போதைப் பழக்கங்களுக்கு ஆளானார் என கூறப்பட்டது. அதன் விளைவாகத்தான் விஷால் இப்போது இப்படி உள்ளார் என்றெல்லாம் பேசப்பட்டது. இது திரையுலகில் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கியது.

mari selvaraj attakaththi dinesh throwback vishal

அட்டகத்தி தினேஷ்: விஷால் குறித்து பேசப்பட்ட அளவிற்கு குக்கு படத்தில் பார்வை மாற்றுத்திறனாளியாக நடித்த தினேஷ் குறித்து அந்த அளவிற்கு பேசப்படவில்லை. அந்த படத்தில் தினேஷ் பார்வை மாற்றுத்திறனாளாக மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இயக்குனர் ராஜமோகன் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு இப்போதும் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர்.

குக்கூ: இந்த படத்தில் நடிக்கும் போது அட்டகத்தி தினேஷ் தனது பார்வையை முற்றிலும் மாற்றி வைத்து அதாவது தனது கண்களை கொஞ்சம் மேலும் கீழுமாக மாற்றி வைத்து படம் முழுவதும் நடித்துள்ளார். இதன் காரணமாகவே இவரது நடிப்பு பெரும் பாராட்டுகளை பெற்றது. ஆனால் இந்த படம் முடிந்த பிறகு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு அட்டகத்தி தினேஷ் அந்த படத்தில் எப்படி இருந்தாரோ அதாவது ஒரு கண் மேலே மற்றும் ஒரு கண் கீழே இருந்தபடியே இருந்துள்ளார். இது தொடர்பாக மாறி செல்வராஜ் பேட்டி ஒன்றில் கூறியது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

mari selvaraj attakaththi dinesh throwback vishal

அதிர்ச்சி: அதாவது குக்கூ படத்துக்கு பிறகு அட்டகத்தி தினேஷ் இயக்குனர் ராமைச் சந்திக்க அவரது அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது மாரி செல்வராஜ் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தார். ராமை பார்க்க வந்த அட்டக்கத்தி தினேஷின் கண்கள் ஒரு மாதிரியாக இருக்கவே இது குறித்து விசாரித்துள்ளனர். அப்போதுதான் குக்கு படத்தில் நடித்த போது ஏற்பட்ட உடல் நல பாதிப்பினால் இவ்வாறு ஆகிவிட்டது எனக் கூறியுள்ளார். மாரி செல்வராஜ் கூறிய இந்தத் தகவல் சினிமா ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X