ரஜினி பட ஷூட்டிங்.. கதறி அழுத மீனா.. எல்லோருமே பதறிட்டாங்களாம்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமான மீனா; பிறகு ஹீரோயினாக எக்கச்சக்க படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக பல வருடங்கள் கோலோச்சினார். வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து செட்டிலான அவர்; சில வருடங்களுக்கு முன்பு தனது கணவரை இழந்தார். அவரது மகள் நைனிகாவும் தெறி படத்தில் நடித்தார். இந்நிலையில் ரஜினி பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் மீனா.
கோலிவுட்டில் மீனா டாப் நடிகையாக ஜொலித்தவர். ரஜினி, கமல், அஜித், சரத்குமார் என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தார். அவரது கண்களுக்காகவே அவரை ரசித்த கூட்டம் இருந்தது. இப்போதும் அவருக்கான ரசிகர்கள் அப்படியேத்தான் இருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை மீனாவின் இடத்தை வேறு எந்த ஹீரோயினாலும் நிரப்ப முடியாது; அது அவருக்கான இடம் மட்டுமே என்பது திண்ணமான கருத்து.

திருமணம் செய்துகொண்ட மீனா: தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஃபுல் ஃபார்மில் நடித்த அவர்; வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர்; தனது மகள் நைனிகாவை தெறி படத்தில் நடிக்க வைத்தார். இதற்கிடையே அவரது கணவர் கொரோனா காலகட்டத்தில் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு மீனாவை நிலைகுலைய செய்தது. அதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்த இழப்பிலிருந்து மீண்டு வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
இரண்டாவது திருமண சர்ச்சை: சமீப காலமாக மீனாவின் இரண்டாவது திருமணம் பற்றிய பேச்சுக்கள் அதிகம் எழுந்தன. அதில் துளியளவும் உண்மை இல்லை என எத்தனையோ முறை சொன்னாலும்; தொடர்ந்து சிலர் வதந்தி பரப்பிவருகிறார்கள். சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில், "என்னுடைய இரண்டாவது திருமணம் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்கள். என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் என்பதையே மறந்துவிடுகிறார்கள். கேட்பதற்கு ஆள் இல்லை என்பதால் இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள்" என கொந்தளித்திருந்தார்.
ரஜினி பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்: இந்நிலையில் இன்னொரு பேட்டியில் தான் குழந்தை நட்சத்திரமாக ரஜினிகாந்த்தின் எங்கேயோ கேட்ட குரல் படத்தில் நடித்தபோது நடந்த சம்பவத்தை பகிர்ந்துகொண்டார். அவர் அந்தப் பேட்டியில், "எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த எங்கேயோ கேட்ட குரல் படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் எனக்கு சூடு வைப்பது போன்ற காட்சியை எடுத்தார்கள். உண்மையிலேயே எனக்கு சூடு வைக்கப்போகிறார்கள் என நினைத்து; ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கதறி அழுதுவிட்டேன். யார் சமாதானம் செய்தாலும் கேட்கவில்லை. தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தேன்.
சமாதானம் செய்த முத்துராமன்: அதனையடுத்து இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் என்னை தூக்கிக்கொண்டு கொஞ்சம் தூரம் நடந்து சாக்லேட்டுகள் எல்லாம் வாங்கி கொடுத்து; சூடெல்லாம் வைக்கமாட்டோம் என கூறினார். அதனையடுத்துதான் நான் சமாதானம் ஆனேன். அதனை நான் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன்" என்றார். முன்னதாக, மீனா இப்போது சீக்ரெட் ஸ்டோரிஸ் ரோஸ்லின் என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். வரும் 27ஆம் தேதி முதல் ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications















