மீனாவின் விருப்பத்திற்கு முட்டுக்கட்டை.. அப்படி நடந்ததற்கு காரணம் அம்மாதானாம்.. என்னனு தெரியுமா?
சென்னை: நடிகை மீனாவின் அம்மா போட்ட தப்பு கணக்கால் ஒரு விஷயம் நடந்திருக்கிறது. அதுகுறித்து மீனாவே மனம் திறந்து பேசியிருக்கிறார்.
நெஞ்சங்கள் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. அதன் பிறகு எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார்.

குழந்தை நட்சத்திரம் டூ கதாநாயகி மீனா
குழந்தை நட்சத்திரமாக சிவாஜி, ரஜினிகாந்த் உள்ளிட்ட ஆளுமைகளுடன் நடித்த மீனா யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழில் ஒரு புதிய கதை படத்தின் கதாநாயகியாக அறிமுகமானர். முதல் படம் சரியாக வெற்றி பெறாவிட்டாலும் அவருக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்தது. அதன்படி கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு வெளியான என் ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக சோலையம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானது.

முன்னணி ஹீரோயினான மீனா
ஒருபக்கம் என் ராசாவின் மனசிலே படம் ஹிட்; மறுபக்கம் குழந்தை நட்சத்திரம் மீனா ஹீரோயினாகிவிட்டார் என்ற ஆச்சரியம் என மீனாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்தார். அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தமிழ் சினிமா அவரை உச்சியில் வைத்து கொண்டாடியது. அதனால் நிற்பதற்கு நேரம் இன்றி தமிழில் பல படங்களில் நடித்தார் மீனா.

ரஜினி, கமலுடன் மீனா
அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா ரஜினியுடன் ஹீரோயினாக ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அப்படி அவர் ரஜினியுடன் நடித்த வீரா, எஜமான், முத்து ஆகிய படங்கள் மெகா ஹிட்டாகின. மேலும் ரஜினியின் ஆகச்சிறந்த ஜோடிகளில் மீனாவும் ஒருவர் என்று பெயர் எடுத்தார். அதேபோல் கமலுடன் மீனா இணைந்து நடித்த அவ்வை சண்முகி, தெனாலி உள்ளிட்ட படங்களும் ஹிட்டாகின.

கண்ணழகி என்று புகழப்பட்ட மீனா
மீனாவின் முகத்தை பார்க்கும்போதும், அவரது குரலை கேட்கும்போதும் இப்போதும் ஒரு சிறுபிள்ளைத்தனம் இருக்கிறது என்றே ரசிகர்கள் கூறுவர். அதேபோல் அவர் உச்சத்தில் இருந்தபோது கண்ணழகி மீனா என்றும் ரசிகர்களால் புகழப்பட்டார். ரஜினி, கமல் மட்டுமின்றி விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ், பிரபுதேவா, விஜய், அஜித் உள்ளிட்டோருடனும் ஜோடிப்போட்டு நடித்திருக்கிறார்.

கே.எஸ்.ரவிக்குமார், மீனா
ரஜினியுடன் அவர் இணைந்து நடித்த படங்கள் மெகா ஹிட்டாகியிருந்தன. அதிலும் ரஜினியை வைத்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய முத்து மெகா ப்ளாக் பஸ்டர் என்பது அனைவரும் அறிந்தது. அதேபோல் ரவிக்குமார் மீனாவை வைத்து இயக்கிய நாட்டாமையும் மெகா ஹிட்டானதால் எப்போதும் அவரை சென்ட்டிமெண்ட்டலாகவே பார்ப்பாராம்.

மீனாவுக்கு மிஸ் ஆன வாய்ப்பு
எனவே படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் மீனாவிடம்தான் ரவிக்குமார் கேட்டாராம். மீனாவுக்கும் நடிப்பதற்கு விருப்பம் இருந்ததாம். ஆனால் மீனாவின் தாயோ, "ரஜினிக்கு இதுவரை மீனா ஜோடியாக மட்டும்தான் நடித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க படையப்பா படத்தில் ரஜினிக்கு எதிராக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்" என மீனாவின் விருப்பத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டாராம். அதனால்தான் மீனா படையப்பா படத்தில் நடிக்கவில்லையாம்.


Click it and Unblock the Notifications











