பணத்துக்காக அந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டாம்... கமலுக்கு ஆர்டர் போட்ட எம்ஜிஆர்!
சென்னை: கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படத்துக்கு பின்னர் அடுத்தடுத்து நடிப்பில் பிஸியாகிவிட்டார் கமல்.
ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2-வில் நடித்து வரும் கமல், அடுத்து மணிரத்னத்துடன் இணையவுள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான கமல், ஆரம்ப காலங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் நடித்து வந்தார்.
இதனை கவனித்து வந்த மறைந்த நடிகரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான எம்ஜிஆர், கமலுக்கு மிக முக்கியமான அட்வைஸ் செய்துள்ளார்.

பரபரப்பான ஷெட்யூலில் கமல்
விஸ்வரூபம், உத்தம வில்லன் படங்களின் தோல்விக்குப் பின்னர் சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகியே இருந்தார் கமல். அரசியல், பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இன்னொரு பக்கம் இந்தியன் 2 ஷூட்டிங்கும் டிராப் ஆகியிருந்தது. இந்த நிலையில் தான் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் கமலுக்கு மட்டும் இல்லாமல், கோலிவுட்டுக்கே இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தது. அதனால், தற்போது மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் வேகம் காட்டி வருகிறார்.

பொன்னியின் செல்வன் கனவு
முன்னதாக பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது மேடையில் பேசிய கமல், பொன்னியின் செல்வன் எம்ஜிஆரின் கனவுப் படம், அவர்களால் அது முடியாமல் போனதும் நான் அந்தப் படத்தின் ரைட்ஸை வாங்கினேன். அப்போது பொன்னியின் செல்வன் உரிமையை எம்ஜிஆர் எனக்கு பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்தார். அதோடு உடனடியாக இந்தப் படத்தை எடுத்துவிடு, இல்லையென்றால் ரொம்ப கஷ்டம் எனக் கூறியதை நினைவுக் கூர்ந்தார்.

எம்ஜிஆரின் வாரிசு கமல்
பொன்னியின் செல்வன் மேடை தவிர பல நிகழ்ச்சிகளில் எம்ஜிஆருடன் இருந்த நட்பும் உறவும் குறித்து பேசியுள்ளார் கமல். சினிமா தொடங்கி அரசியல் வரை கமல்ஹாசனை தன்னுடன் இருக்குமாறு அழைத்தவர் எம்ஜிஆர். இந்நிலையில், கமலுக்கு எம்ஜிஆர் செய்த முக்கியமான அட்வைஸ் பற்றிய சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. களத்தூர் கண்ணம்மா படத்தில் பால் வடியும் குழந்தை முகத்துடன் அறிமுகமான கமல், எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடனும் நடித்துள்ளார்.

பணத்துக்காக அது வேண்டாம்
அதன் பின்னர் நடிகனாக மட்டும் இல்லாமல், அசிஸ்டெண்ட் டான்ஸ் மாஸ்டராகவும் வேலை பார்த்துள்ளார் கமல். மேலும், சின்ன கேரக்டராக இருந்தாலும் பணத்துக்காக கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது ஒருமுறை எம்ஜிஆரை சந்தித்த கமல், தான் நல்ல படத்தில் நடிக்கும் போது உங்களுக்கு அந்த படத்தை போட்டுக் காட்டுகிறேன் என்றாராம்.

எம்ஜிஆரின் அட்வைஸ்
உடனடியாக கமலை பார்த்து சிரித்த எம்.ஜி.ஆர், "ஓ நல்ல படம் இல்லைன்னு தெரிஞ்சுதான் நடிச்சிட்டு இருக்கியா.? கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடித்தால் நீண்டநாள் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது. அதனால் கதை நன்றாக இல்லையென்றால் அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம்" என கமலுக்கு அன்புக் கட்டளை போட்டுள்ளார் எம்ஜிஆர். அதன்பிறகே கதை, திரைக்கதைகளில் அதிக கவனம் செலுத்தி கமல் நடித்தாராம்.


Click it and Unblock the Notifications











