Rajinikanth - ரஜினி கையில் சிகரெட், சரக்கு பாட்டில்.. டென்ஷனான எம்ஜிஆர்.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரஜினிகாந்த்தால் எம்ஜிஆர் டென்ஷனான சம்பவம் ஒன்று தெரியவந்திருக்கிறது.

சூப்பர் ஸ்டார் என்ற நாற்காலியில் அமர்ந்திருப்பவர் ரஜினிகாந்த். அவருக்கென்று செலிபிரிட்டிகளிலிருந்து சாமானியர்கள் வரை ரசிகர்களாக இருக்கின்றனர். அவரது நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் மெகா ஹிட்டடித்திருக்கிறது. அதே உற்சாகத்தோடு அடுத்ததாக ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த்.

MGR Got Angry With Rajinikanth Here is the details

தலைவர் 171: அதேபோல் இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி. அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன் ஷூட்டிங் மார்ச் அல்லது ஏப்ரலில் தொடங்கவிருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் இந்திய அளவில் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறது. ஏனெனில் லோகேஷ் கனகராஜ் தொட்டதெல்லாம் ஹிட் என்பதால் அந்த நம்பிக்கை பெரும்பாலானோரிடம் இருக்கிறது.

சர்ச்சைகள்: ரஜினிகாந்த் இப்போது அமைதியாக இருக்கிறார். ஆனால் அவர் வளர்ந்த காலகட்டத்தில் பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். குறிப்பாக தனது மனதில் பட்டதை பட்டென்று பேசியதால் பல பிரச்னைகளை சந்தித்தும் இருக்கிறார் அவர். மேலும் ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்திருக்கிறார். குறிப்பாக எம்ஜிஆருக்கு ரஜினிகாந்த்தின் வளர்ச்சி பெரிதாக பிடிக்கவில்லை என பேச்சு அப்போது பலமாகவே உண்டு.

டென்ஷனான எம்ஜிஆர்: இந்நிலையில் ரஜினிகாந்த் மீது எம்ஜிஆர் டென்ஷனான சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1982ஆம் ஆண்டு வெளியான படம் ரங்கா. அந்த சமயத்தில் எம்ஜிஆர்தான் முதலமைச்சர். அப்போது அபிராமி திரையரங்கில் அன்னை அபிராமி என்ற ஸ்க்ரீன் திறப்பு விழா நடந்திருக்கிறது.

அதனை திறந்துவைக்க எம்ஜிஆர் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் சைதாப்பேட்டையிலிருந்து அண்ணா சாலை வரை இருபுறமும் ரங்கா படத்தில் ரஜினிகாந்த் ஒரு கையில் சிகரெட், மறு கையில் சரக்கு பாட்டிலோடு இருக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்திருக்கின்றன. அதனை பார்த்து எக்கச்சக்க டென்ஷனாகிவிட்டாராம் எம்ஜிஆர்.

ஸ்க்ரீனை திறந்துவைத்துவிட்டு பேசிய எம்ஜிஆர், தற்போது இளைஞர்கள் எல்லாம் கெட்டுப்போய்விட்டார்கள். அனைவரது கையிலும் புகையும் மதுவும் இருக்கிறது. சினிமாக்காரர்களும் அதன் வீரியம் தெரியாமல் மது, புகையுடன் நடிக்கிறார்கள். நான் எல்லாம் அப்படி நடித்ததே இல்லை. இதெல்லாம் உடனடியாக மாற வேண்டும் என டென்ஷனாக பேசியிருக்கிறார். எம்ஜிஆர் பேசியது காட்டுத் தீ போல் பரவிவிட உடனடியாக அந்த போஸ்டர்கள் எல்லாம் அகற்றப்பட்டுவிட்டனவாம். இதனை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X