கமல் வந்தாலே 500 பெண்கள் இருப்பார்கள்.. மைக் மோகன் சொன்ன டாப் சீக்ரெட்
சென்னை: கோலிவுட்டில் 80களில் கொடிக்கட்டி பறந்தவர் மோகன். முக்கியமாக பெண்களுக்கு மிகவும் பிடித்தவராக வலம் வந்த அவருக்கு பலர் ரசிகர்களாக இருந்தனர். அதிலும் தன்னுடைய பெரும்பாலான படங்களில் மேடையில் பாடுவது போன்ற காட்சிகள் இருந்ததால் அவர் ரசிகர்களால் மைக் மோகன் என்றும் அழைக்கப்பட்டார். பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மோகன் திடீரென்று காணாமல் போனார். இப்போது தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
தற்போது பல வருடங்களுக்கு பிறகு தரமான கம்பேக் கொடுக்கவிருக்கிறார் மோகன். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் படத்தில்தான் மோகன் நடிக்கிறார். முக்கியமாக அதில் அவர் வில்லனாக கமிட்டாகியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இத்தனை வருடங்கள் அமைதியாக இருந்த மோகன் விஜய்யுடன் சேர்ந்து எப்படி ஸ்கோர் செய்யப்போகிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

அதிக ரசிகைகள்: இளம்பெண்களை அதிகம் ஈர்த்தவர் என்றால் அது கமல்ஹாசனுக்கு பிறகு மோகன் மட்டும்தான். ரஜினிகாந்த்தை போலவே மோகனும் கன்னடத்துக்காரர். மோகனுக்கு தமிழ் தெரியாது என்பதே இங்கு பலருக்கும் தெரியாது என எல்லோரையும் விமர்சிக்கும் பயில்வான் ரங்கநாதன்கூட மோகனை புகழ்ந்திருந்தார்.
மோகன் பேட்டி: இந்நிலையில் மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "கோகிலா படத்தின் ஷூட்டிங் பெங்களூருவில் நடைபெற்றது. கமல்ஹாசனின் முதல் கன்னட படம் அது. என்னுடைய முதல் படமும் அதுதான். கமல் ஹாசனை கல்லூரி காலத்திலிருந்து பார்த்து ரசித்து வந்திருக்கிறேன்.
பாக்கியம்: அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் எனக்கு. அப்படித்தான் அப்போதும் எப்போதும் கருதினேன். அந்த சமயத்திலேயே கமல்ஹாசன் சார் ஷூட்டிங் வந்தால் 500க்கும் மேற்பட்ட பெண்கள் அவரைப் பார்க்க வந்துவிடுவார்கள். அந்த அளவுக்கு அவர் மிது கிரேஸ் இருந்தது. அவர் வந்தால் ஏன் எப்போதும் கிளம்புகிறேன் என்றால் அது அவருக்கு கொடுத்த ரெஸ்பெக்ட். அதனால்தான் அவர் வரும்போதெல்லாம் எழுந்துவிடுகிறேன்'' என்றார்.
ஹரா: மோகன் இப்போது கோட் படத்தை தவிர்த்து ஹரா என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை விஜய் ஸ்ரீ என்பவர் இயக்கியிருக்கிறார். படமானது விரைவில் வெளியாகவிருக்கிறது. நீண்ட வருடங்களுக்கு பிறகு மோகன் ஹீரோவாக இந்தப் படத்தில் நடித்திருப்பதால் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications