மைக் மோகன் என்றால் பாட்டு பாடுறவர்னு நினைச்சிங்களா.. ஒரிஜினல் டானை சந்தித்த சம்பவம்

சென்னை: கோலிவுட்டில் 80களில் கொடிக்கட்டி பறந்தவர் மோகன். முக்கியமாக பெண்களுக்கு மிகவும் பிடித்தவராக வலம் வந்த அவருக்கு பலர் ரசிகர்களாக இருந்தனர்.அதிலும் தன்னுடைய பெரும்பாலான படங்களில் மேடையில் பாடுவது போன்ற காட்சிகள் இருந்ததால் அவர் ரசிகர்களால் மைக் மோகன் என்றும் அழைக்கப்பட்டார். பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மோகன் திடீரென்று காணாமல் போனார். இப்போது தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார்.

தற்போது பல வருடங்களுக்கு பிறகு தரமான கம்பேக் கொடுக்கவிருக்கிறார் மோகன். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் கோட் படத்தில்தான் மோகன் நடிக்கிறார். முக்கியமாக அதில் அவர் வில்லனாக கமிட்டாகியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இத்தனை வருடங்கள் அமைதியாக இருந்த மோகன் விஜய்யுடன் சேர்ந்து எப்படி ஸ்கோர் செய்யப்போகிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Mic Mohan Goat

பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில் மைக் மோகன் குறித்து பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், "ஒருகாலத்தில் கமல் ஹாசனின் கவனம் எல்லாம் ஹிந்தி படத்தின் மீது இருந்தது. அப்போது கமலின் பாணியை பின்பற்றி நடிக்க ஆரம்பித்தவர் மோகன். மோகனின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தவர் இசைஞானி இளையராஜாதான். வித்தியாசமான ஸ்டைலை மோகன் காண்பித்தவர்.

அதிக ரசிகைகள்: இளம்பெண்களை அதிகம் ஈர்த்தவர் என்றால் அது கமல் ஹாசனுக்கு பிறகு மோகன் மட்டும்தான். ரஜினிகாந்த்தை போலவே மோகனும் கன்னடத்துக்காரர். மோகனுக்கு தமிழ் தெரியாது என்பதே இங்கு பலருக்கு தெரியாது. அந்த அளவுக்கு அவருக்கு பின்னணி குரல் கொடுக்கப்பட்டிருந்தது. அவருக்கு அப்படி பின்னணி குரல் கொடுத்தது சுரேந்தர். அவர் விஜய்யின் தாய்மாமா.

தகராறு: மோகனின் மார்க்கெட் சரிந்த காலத்தில் அவருக்கும் சுரேந்தருக்கும் மோதல் ஏற்பட்டது. ஏனெனில் மோகனின் வெற்றிக்கு தன்னுடைய குரல்தான் காரணம் என சுரேந்தர் தொடர்ந்து சொல்லிவந்தார். அனைத்து நடிகைகளுடனும் மைக் மோகன் நடித்தவர். மோகனின் நடனத்தில் எப்போதும் ஒரு நளினம் இருக்கும்.

வரதராஜ முதலியார் பற்றி மோகன்: அந்தப் பேட்டியில் பேசிய மோகன், ' நான் ஒரு ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போது வரதராஜ முதலியாரிடமிருந்து ஃபோன் வந்தது. அதாவது அவரது அசிஸ்டெண்ட் எனக்கு ஃபோன் செய்தார். அவர், உங்களை பார்க்க அவர் ஆசைப்படுகிறார் என்று என்னிடம் சொன்னார். அப்போது சென்னைக்கு அவர் வந்திருந்தார். நான் நேரில் பார்க்க போனேன். ரொம்ப இயல்பாகவே இருந்தார். உங்கள் படங்கள் அத்தனையும் பார்ப்பேன் என்று சொன்னார். பிறகு என்ன வேண்டும் என்று கேட்டார். ஒன்றும் வேண்டாம் சார் உங்கள் அன்பு போதும் என்று சொன்னேன்' என்றார் மோகன். வரதராஜ முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்துதான் நாயகன் படம் உருவானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X