ஒழுங்கா முத்தம் கொடுக்கமாட்டியா?.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகையை தாக்கிய மோகன் பாபு.. டெரர்தான் போல

ஹைதராபாத்: மோகன் பாபு தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவர். அவர் தனது இரண்டாவது மகன் மனோஜ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல் மனோஜும் புகார் அளித்தார். இந்த விஷயம் டோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில்; நேற்று அவரது வீட்டுக்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை மோகன் பாபு தாக்குவதற்கு முற்பட்டார். இந்நிலையில் அவர் நடிகை ஷில்பா சிவானந்த்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் தாக்கிய சம்பவமும் அரங்கேறியிருக்கிறது.

மோகன் பாபு தெலுங்கு திரையுலகில் ஃபேமஸ் நடிகராக வலம் வருபவர். சென்னையில் இருக்கும் சினிமா கல்லூரியில் படித்த மோகன் பாபு 1974ஆம் ஆண்டு வெளியான அல்லூரி சீத்தாராம ராஜு என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு வெளியான சொர்க்கம் நரகம் என்ற படத்தின் மூலம் முதல் ஹிட்டை பெற்றார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததை அடுத்து தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி மொத்தம் அவர் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் தமிழிலும் அவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

throwback stories mohan babu

சூரரைப் போற்று: அண்ணன் ஒரு கோயில் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர் தாய் மீது சத்தியம், அன்னை ஒரு ஆலயம், ரத்த பாசம், குரு, கர்ஜனை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்காலத்தினருக்கு தெரிய வேண்டுமென்றால் சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு மேலதிகரியாக நடித்திருப்பாரே அவர்தான் மோகன் பாபு. நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு என பிஸியாக இருந்த அவர்; எம்.பியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன் பாபுவின் குடும்பம்: அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள். அவர்களில் இரண்டாவது மகன் மனோஜுக்கும், மோகன் பாபுவுக்கும் இடையேதான் இப்போது மோதல் வெடித்திருக்கிறது. அதாவது மோகன் பாபு சமீபத்தில் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்தப் புகாரில் அவர், "எனது இரண்டாவது மகனான மனோஜ் சில சமூக விரோதிகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்து தொந்தரவு செய்தார். எனக்கும் எனது சொத்துக்களுக்கும் பாதுகாப்பு இல்லாததால் எனக்கு பயமாக இருக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து மனோஜ் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

செய்தியாளர்களின் மீது தாக்குதல்: சூழல் இப்படி இருக்க மனோஜும் தன்னை பத்துக்கும் மேற்பட்டோர் வீட்டில் வைத்து தன்னை தாக்கியதாக புகார் அளித்திருக்கிறார். ஆனால் அதில் மோகன் பாபுவின் பெயர் இடம்பெறவில்லை. இதனையடுத்து நேற்று இதுதொடர்பாக மோகன் பாபு வீட்டுக்கு செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றார்கள். அப்போது அவர்களின் மைக்கை பிடுங்கி அவர்களை தாக்க முற்பட்டார் மோகன். அந்த வீடியோ பெரும் ட்ரெண்டாகி கடும் கண்டனத்தை அவருக்கு சம்பாதித்துக்கொடுத்தது.

நடிகை மீது தாக்குதல்: இந்நிலையில் மோகன் பாபு குறித்து இன்னொரு விஷயமும் தெரியவந்திருக்கிறது. அதாவது அவர் தனது மகனை வைத்து ஒரு படத்தை இயக்கினார். அந்தப் படத்தில் ஷில்பா சிவானந்த் என்பவர் ஹீரோயினாக நடித்தாராம். அந்தப் படத்தின் ஒரு காதல் காட்சியில் ஷில்பா ஒழுங்காக தனது மகனுக்கு முத்தம் கொடுக்கவில்லை என்பதன் காரணமாக அவரையும் அவரது தாய் பர்வீனா சுல்தானாவையும் ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்தே தலை முடியை பிடித்து தாக்க ஆரம்பித்துவிட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்த ஷில்பா உடனடியாக ஜுபிளி ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகாரும் கொடுத்தாராம். அதுதொடர்பான பழைய செய்தித்தாள் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள், மோகன் பாபு அப்போவே இவ்வளவு மோசமாக நடந்திருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X