யாரும் இப்படியெல்லாம் செய்யமாட்டாங்க.. நடிகரின் தந்தையிடம் ஓபனாக சொன்ன ரஜினி

சென்னை: ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார். 74 வயது ஆனாலும் இப்போதும் சுறுசுறுப்பாக நடித்துவரும் அவரைப் பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமும் ஆச்சரியத்தில் வாயடைத்து போயிருக்கிறது. நிச்சயமாக கூலி படம் அவரது கரியரில் மெகா ப்ளாக் பஸ்டராக அமையும் என்று அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் ரஜினி குறித்து ஒரு விஷயம் தெரியவந்திருக்கிறது.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியானாலும் அந்தப் படம் சரியான வரவேற்பை பெறவில்லை. அதேசமயம் இப்படிப்பட்ட கதைகளில் நடித்ததன் காரணமாக ரஜினிகாந்த்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்; தொடர்ந்து இதுபோன்று சமூக அக்கறை உள்ள கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க வேண்டும் என்று அவருக்கு ரசிகர்களும், திரை ஆர்வலர்களும் கோரிக்கைகள் வைக்கிறார்கள்.

Throwback Stories Rajinikanth Jayam Ravi

கூலி கூட்டணி: வேட்டையன் திரைப்படத்தை முடித்த ரஜினி இப்போது கூலி படத்தில் நடித்துவருகிறார். தமிழ் சினிமாவின் சென்சேஷனலாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கிவருகிறார். ரஜினியுடன் அமீர் கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், அபிராமி உள்ளிட்டோர் நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இதில் நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடவிருக்கிறார். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்புதான் வெளியானது.

ஜெயிலர் 2: கூலி படத்தை முடித்துவிட்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார் ரஜினி. ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாகம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. நிச்சயமாக அதுபோன்றே இந்தப் படமும் மெகா ஹிட்டாகும் என்று உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். படத்தின் அறிவிப்பு வீடியோ கடந்த பொங்கலுக்கு வெளியாகி மாஸ் ரெஸ்பான்ஸை பெற்றது. அதனைப் பார்த்த ரசிகர்களோ உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றிருக்கிறார்கள்.

புகழும் ரஜினிகாந்த்: ரஜினியை பொறுத்தவரை தான் எவ்வளவு பெரிய உயரத்துக்கு சென்றாலும் மற்ற நடிகர்களின் படங்களை தொடர்ந்து பார்த்து; அது தனக்கு பிடித்திருந்தால் நடிகர், இயக்குநர் உள்ளிட்ட அந்தப் படத்தின் குழுவை அழைத்து பாராட்டுவது வழக்கம். லவ் டுடே, ஜெய் பீம், அமரன் என பல படங்களை அவர் பார்த்துவிட்டு நேரில் அழைத்து பாராட்டியிருக்கிறார். அதேபோல் அந்தப் படம் பற்றிய தனது கருத்துக்களையும் எந்தவித ஒளிவு மறைவுமின்றி சொல்லக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் ரவி மோகனின் அப்பா எடிட்டர் மோகனிடம் ரஜினிகாந்த் ஜெயம் படம் பற்றி பேசிய விஷயம் தெரியவந்திருக்கிறது.

என்ன நடந்தது?: அதாவது தனது மூத்த மகன் ராஜாவை இயக்குநராகவும், இளைய மகன் ரவியை ஹீரோவாகவும் வைத்து ஜெயம் படத்தை தயாரித்து அறிமுகம் செய்தார் எடிட்டர் மோகன். அந்தப் படத்துக்காக எக்கச்சக்கமாக செலவு செய்தாராம். குறிப்பாக ஒரு ட்ரெய்னையே பத்து நாட்களுக்கு வாடகைக்கு எடுத்தாராம். படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக ரஜினியை அழைத்து படத்தை திரையிட்டு காண்பித்தார்களாம். படத்தினை பார்த்த ரஜினிகாந்த், மனம் விட்டு புகழ்ந்தாராம்.

அதுமட்டுமின்றி புதுமுகங்களை வைத்து எடுக்கும் முதல் படத்துக்கு யாரும் இவ்வளவு செலவு செய்யமாட்டார்கள். நீங்கள் இவ்வளவு செலவு செய்திருக்கிறீர்களே சூப்பர் என்று மோகனிடம் சொன்னாராம். அதற்கு எடிட்டர் மோகனோ, இது என் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக செய்த செலவு சார் என்று கூறினாராம். அதனை கேட்டு ரஜினிகாந்த் மகிழ்ந்தாராம். இதனை இயக்குநர் மோகன் ராஜா தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X