2 நாட்கள்.. 50 முறை.. லிப் லாக் அடித்த மேட்ரிக்ஸ் ஹீரோ.. மோனிக்கா பெலூச்சி என்ன சொன்னார் தெரியுமா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: சர்வதேச அளவில் பிரபலமான நடிகை மோனிக்கா பெலூச்சிக்கு தற்போது 60 வயதாகிறது. 1991ம் ஆண்டு வெளியான இத்தாலிய படமான லா ரிஃப்பா படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் மோனிக்கா பெல்லூச்சி. இந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான கூலி படத்தின் ஓபனிங் பாடலிலேயே மோனிக்கா பெல்லூச்சிக்கு ட்ரிப்யூட் செய்வது போலத்தான் மோனிக்கா பாடல் உருவானது, அதில் பூஜா ஹெக்டே நடனமாடியிருந்தார்.

2000ம் ஆண்டு கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு முன்னர் மோனிக்கா பெலூச்சி நடிப்பில் வெளியான மெலினா படத்தில் அவரது நடிப்பை பார்த்துவிட்டு பல இளைஞர்கள் மட்டுமின்றி சினிமா ஆளுமைகளே தூக்கத்தை தொலைத்து விட்டனர்.

Monica Belluci once revealed Keanu Reeves took 2 days and take 50 times for lip kiss scene
Photo Credit:

முழு நிர்வாணமாக படத்தில் பல காட்சிகளில் நடித்து மிரட்டிய மோனிக்கா பெலூச்சிக்கு ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படமான தி மேட்ரிக்ஸ் ரீலோடட் படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, அந்த படத்தின் ஹீரோ கியானு ரீவ்ஸ் 2 நாட்கள் 50 முறை மோனிக்கா பெலூச்சிக்கு லிப் லாக் அடிக்கும் காட்சியில் அத்தனை ரீடேக் எடுத்து நடித்திருக்கிறார்.

மோனிக்கா பெலூச்சி: தனது 2வது படத்திலேயே மோனிக்கா பெலூச்சி கியானு ரீவ்ஸ் உடன் இணைந்து பிராம் ஸ்டோக்கர்ஸின் டிராகுலா படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திலும் இருவரும் லிப் லாக், படுக்கையறை காட்சிகள் என தாராளமாக நடித்திருந்தனர். ஒவ்வொரு 8 வருடத்துக்கும் ஒருமுறை கியானு ரீவ்ஸ் தனக்கு லிப் லாக் கொடுப்பது போல படங்களில் நடித்துள்ளோம் என்றும் ஒரு பேட்டியில் மோனிக்கா பெல்லூச்சி கூறியுள்ளார்.

தி மேட்ரிக்ஸ்: "தி மேட்ரிக்ஸ்" திரைப்படத்தில் மெயின் ஹீரோயினாக கேரி-ஆன் மோஸ் (டிரினிட்டி) நடித்திருந்தார். மோனிக்கா பெலூச்சி (பெர்சிஃபோன்) எனும் கதாபாத்திரத்தில் 2ம் பாகத்தில் இணைந்தார். மனிதனுக்கும் மெஷினுக்கும் இடையேயான யுத்தம் குறித்த கதையை 25 வருடங்களுக்கு முன்பே இந்த படம் பேசியிருந்தது. அந்த படத்தில் கியானு ரீவ்ஸ் உடன் லிப் லாக் காட்சியில் நடித்த அனுபவத்தை வார்னர் பிராஸ் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், மோனிக்கா பெல்லூச்சி கூறியுள்ளார்.

2 நாள்.. 50 முறை: "ஒரு லிப் லாக் காட்சியைப் படமாக்க எங்களுக்கு இரண்டு நாட்கள் ஆனது. முதலில் நிறைய உடைகளுடன், பிறகு குறைவான உடைகளுடன் என சுமார் 50 முறை அந்தக் காட்சியை எடுத்தனர். கியானு சிறப்பாக முத்தமிடுவார் என்பதால் அது வேதனையாக இல்லை. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, நான் 'பிராம் ஸ்டோக்கர்ஸ் டிராகுலா' படத்தில் நடிக்கும்போது ஒரு மாடலாக இருந்தேன். அப்போதும் கியானுவை முத்தமிட வேண்டியிருந்தது. ஒவ்வொரு எட்டு வருடங்களுக்கும் நான் கியானு ரீவ்ஸை முத்தமிடுகிறேன்." என்றார். அந்த காலத்திலேயே மோனிக்கா மீது கியானு ரீவ்ஸுக்கு அவ்வளவு ஆசையா என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அந்த காட்சியை ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X