MR Radha: 8 பொண்டாட்டியை ஒரே வீட்டுல வெச்சு சமாளிச்சாரு எம்.ஆர். ராதா.. பேரன் சொன்ன அந்த விஷயம்!
சென்னை: மறைந்த தமிழ் சினிமாவின் மூத்த கலைஞர் இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவின் புரட்சியாளர் எம்.ஆர். ராதா. இவர் குறித்த பல தகவல்கள் பல சுவாரஸ்யமான விஷயங்கள் பலருக்கும் தெரிந்ததே. அப்படி இருக்கும்போது அவரது பேரன் வாசு விக்ரம் என்கிற பார்த்திபன் ஒரு முறை அளித்த பேட்டியில் எம்.ஆ.ர் ராதா குறித்து பேசியுள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக எம்.ஆர். ராதாவின் 8 மனைவிகள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
எம்.ஆர். ராதா தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல், தமிழ் நாடகம், அரசியல் என பலவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியவர். குறிப்பாக பெரியாரின் திராவிடர் கழகத்தின் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றில் அவர் கலந்து கொண்டு தனது நாடகங்கள் அரங்கேற்றம் செய்துள்ளார். ராமாயண நாடகத்தை அவர் அரங்கேற்றம் செய்த போது, ராமன் வேடத்தில் இருந்த அவர் மாட்டுக்கறி உண்டு கொண்டே நடித்ததற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். அதேபோல், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யவும் முயற்சி செய்தார். இவ்வளவு சர்ச்சைகளுக்கு ஆளானாலும், எந்த இடத்திலும் தனது பகுத்தறிவுச் சிந்தனையைக் விட்டுக் கொடுக்காதவர்.

தக் லைஃப் மொமெண்ட்ஸ்: எம்.ஆர். ராதா பகுத்தறிவோடு நக்கல் பிடித்தவர். சிவாஜி கணேசன் புதிதாக வாங்கிய காரை தனக்கு சாப்பாடு வாங்கி வர வீட்டுக் அனுப்பும்படி கேட்டபோது அவர் மறுத்ததாகவும், அதன் பின்னர் சிவாஜி வாங்கிய அதே மாடல் காரை வாங்கி அதில் வைக்கோலைப் போட்டு படப்பிடிப்புத் தளத்திற்கு அனுப்பியதாகவும் ஒரு பேச்சு இப்போதும் திரையுலகில் உண்டு. சினிமாக்காரர்களாகிய எங்கள் பின்னால் சுற்றாதீர்கள். நாங்கள் கூத்தாடிகள் எங்கள் பின்னால் சுற்றுவதை விட்டுவிட்டு உங்கள் குடும்பத்தை பாருங்கள் என்று கூறியவர் இவர்தான்.
8 மனைவிகள்: எம்.ஆர். ராதா மீது பலரும் வைக்கும் குற்றச்சாட்டு அவர் பல பெண்களை திருமணம் செய்து கொண்டார் என்பதுதான். இது தொடர்பாக அவரது பேரன் நடிகர் வாசு விக்ரம் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. அந்த பேட்டியில், " எனது தாத்தா 8 பொண்டாட்டி கட்டினார். இப்போது எல்லாம் 2 பொண்டாட்டி கட்டினாலே பலரும் திண்டாடுகிறார்கள். ஆனால் அவர் 8 பேரை திருமணம் செய்து 8 பேரையும் ஒரே வீட்டில் வைத்து பார்த்துக் கொண்டார். தினமும் 100 பேருக்கு வீட்டில் சாப்பாடு சமைப்பார்கள். 6 கார் மற்றும் இரண்டு வேன் வைத்திருந்தார்.

சொத்து பிரிப்பு: தாத்தா (எம்.ஆர். ராதா) தனது சொத்தை அனைவருக்கும் சரி சமமாக பிரித்துக் கொடுத்தார். திருச்சியில் 43 வீடுகளை எங்களுக்கு ஒரே இடத்தில் கட்டினார். ஆனால் அவற்றை எங்களால் பராமரிக்க முடியாததால் நாங்கள் அவற்றை விற்று விட்டோம். சித்தப்பா ராதா. ரவி இருக்கும் தேனாம்பேட்டை வீடுதான். அதுதான் எங்களுக்கு ஹெட் ஹோட்டர்ஸ். நாங்கள் அனைவரும் அங்குதான் இருப்போம். எனது தாத்தா இறந்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் எனது தகப்பனாரும் மறைந்துவிட்டார். நான் சினிமாவுக்கு வரும் வரை எனக்கு எனது தாத்தா குறித்து பெரிதாக எதுவும் தெரியவில்லை. அதன் பின்னர்தான் நான் தெரிந்து கொண்டேன்" என்று கூறியுள்ளார். அவரது பழைய பேட்டி பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











