Mumtaj: வேலைய பார்த்துட்டு போங்க.. மும்தாஜ் என்ன இப்படி சொல்லிட்டாங்க.. யாருக்கு இந்த பதில்!

சென்னை: நடிகை மும்தாஜ் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல், தென்னிந்திய சினிமாவில் பரவலாக அறியப்பட்ட நடிகை. இவர். பெரும்பாலும் கிளாமர் ஆர்ட்டிஸ்ட்டாக தான் அதிகம் அறியப்பட்டவர். சில்க் ஸ்மிதா விற்குப் பிறகு நீண்ட காலம் தமிழ் சினிமாவில் கிளாமர் ஆர்ட்டிஸ்ட்டாக நிலைத்து நின்றவர் நடிகை மும்தாஜ். இவரை நடிகை கௌதமி பேட்டி எடுத்த போது பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

நடிகை மும்தாஜ், குஷி படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடல், ஏழுமலை படத்தில் லக்ஸ் பாப்பா பாடல், சாக்லேட் படத்தில் மருதமலை பாடல் என சொல்லிக் கொண்டே போகலாம். தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் நன்கு அறியப்பட்ட கிளாமர் ஆர்ட்டிஸ்ட்டாக ஒரு காலத்தில் இருந்தவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார் மும்தாஜ்.

Mumtaj Mumtaj Throwback Mumtaj Interview

மும்தாஜ் சினிமாவில் இருந்து விலகி இருப்பதற்கு காரணம், முழுவதும் ஆன்மீகவாதியாக மும்தாஜ் மாறிவிட்டார். மெக்காவுக்குச் சென்று தான் வழிபடுவதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். ஒரு காலத்தில் கிளாமர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த மும்தாஜ் தற்போது முழுக்க முழுக்க ஆன்மீகவாதியாக மாறியுள்ளார். இது தொடர்பாக சிலர் என்ன விமர்சித்தாலும் அது குறித்து கவலை கொள்ளாமல், கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, ஆன்மீகத்தில் தீவிரமாக செயல் படுகிறார்.

மும்தாஜ்: இப்படியான நிலையில் மும்தாஜை நடிகை கௌதமி பேட்டி எடுத்தார். அப்போது அவரிடம் உருவக்கேலி தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு மும்தாஜ் அளித்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, உருவக்கேலி இங்கு பரவலாக உள்ளது. நான் சமீபத்தில் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் கூட உருவக்கேலி இருந்தது. இங்கு யாருமே அழகான தோற்றத்துடன் வாழ்நாள் முழுவதும் இருக்கப்போவது கிடையாது. அதற்கு எந்தவிதமான உத்திரவாதமும் கிடையாது.

Mumtaj Mumtaj Throwback Mumtaj Interview

உருவகேலி: நாம் யார் என்று நமது குடும்பத்திற்கு தெரியும், நாம் யார் என்று நமக்குத் தெரியும், நாம் யார் என்று நம்மை படைத்தவனுக்கு தெரியும். எனவே நாம் இதுபோன்ற விஷயங்களுக்கு எல்லாம் பதில் அளித்துக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே நாம் செய்ய வேண்டியது, நமது வேலையை பார்த்து போய்க்கொண்டே இருக்க வேண்டும். அதாவது உங்களை யாராவது உருவ கேலி செய்தால் உங்கள் வேலையைப் பார்த்து போய்க்கொண்டே இருங்கள், பேசுற வாய் பேசிட்டு தான் இருக்கும்" என பதில் அளித்தார். அவரது பதில் பலரது கவனத்தை ஈர்த்தது. இந்த பழைய பேட்டி தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X