Deva - மனைவி முன்பு அப்படி பேசிய நடிகை.. செய்வதறியாது விழித்த இசையமைப்பாளர் தேவா!
சென்னை: Deva (தேவா) இசையமைப்பாளர் தேவா தனது வாழ்க்கையில் நடந்த விஷயம் குறித்து பேசியிருக்கிறார்
இந்து படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் தேவா. முதல் படத்தின் பாடல்கள் ஹிட்டடித்ததை அடுத்து கவனிக்கப்படும் இசையமைப்பாளராக மாறினார். அடுத்தடுத்த படங்களில் மெலோடி, கானா என வெரைட்டியாக இசையை கொடுத்தார். எனவே ரசிகர்களால் தேனிசை தென்றல் என்று அழைக்கப்படுகிறார். 90களில் ஏ.ஆர்.ரஹ்மான் உச்சத்தில் இருந்தபோதும் தேவாவின் கொடியும் உயரவே பறந்தது.

முன்னணி ஹீரோக்கள்: 90களில் முன்னணி ஹீரோக்களாக இருந்த ரஜினி, கமல் அப்போது வளர்ந்துவரும் ஹீரோக்களாக இருந்த அஜித், விஜய், பிரசாந்த், சூர்யா என அனைவரது படங்களுக்கும் தேவா இசையமைத்துக்கொண்டிருந்தார். ஒவ்வொரு இசையும் வேறு வேறு மாதிரி இருந்ததால் அத்தனையும் ஹிட்டடித்தன. குறிப்பாக ரஜினிகாந்த்தும், கமல் ஹாசனும் தொடர்ந்து தேவாவுக்கு வாய்ப்புகளை கொடுக்க ஆரம்பித்தனர்.
தேனிசை தென்றல்: தேவாவை பொறுத்தவரை எந்த ஜானரிலும் அசால்ட்டாக சிக்சர் அடித்தவர். ஆசை, அப்பு, முகவரி, குஷி, ஆஹா, காதல் கோட்டை, அருணாச்சலம், பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் என பல படங்களில் அருமையான மெலோடிகளை கொடுத்தவர். அவரது மெலோடி பாடல்கள் காலங்கடந்தும் இன்றும் கேட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக 90ஸ் கிட்ஸுகளின் டாப் இசையமைப்பாளர்களின் லிஸ்ட்டில் முதல் ஐந்து இடங்களுக்குள் தேவா கண்டிப்பாக இருப்பார்.
கானா தேவா: மெலோடியில் எப்படி தன்னை நிரூபித்தாரோ அதேபோல் கானா பாடலிலும் தன்னை நிரூபித்தவர் தேவா. இன்னும் சொல்லப்போனால் கோலிவுட்டில் கானாவுக்கென்று அடையாளமாக இருப்பவரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை ஒரு கானா பாடல் பாட வேண்டுமென்றால் அதற்கு தேவாவின் ரெஃபரன்ஸ்தான் எடுக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. உச்சத்தில் இருந்த தேவா காலம் செல்ல செல்ல சினிமாவிலிருந்து ஒதுங்கினார். கடைசியாக அவர் சிங்கப்பூரில் ஒளிபரப்பாகும் ஒரு தமிழ் நாடகத்துக்கு இசையமைத்தார்.
நடிகையின் செயல்: இந்நிலையில் தேவாவின் மனைவிக்கு முன்பு விஜய் பட நாயகி செய்த செயல் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது தேவாவுக்கு விழா ஒன்று எடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக அவரது மனைவி நிகழ்ச்சிகளில் தலை காட்டாதவர். அந்த நிகழ்ச்சிக்கென்று தேவா தனது மனைவியை எப்படியோ பேசி அழைத்து வந்துவிட்டாராம்.
அப்போது மேடை ஏறிய நடிகை ஸ்வாதி தேவா இல்லைனா எனக்கு வாழ்க்கையே இல்லை. இப்போது நான் சொகுசான வாழ்க்கை வாழ்கிறேன் என்றால் அதற்கு தேவா மட்டும்தான் காரணம் என ஆஹா ஓஹோவென புகழ்ந்துவிட்டாராம். இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த தேவாவின் மனைவி இதனை கேட்டுவிட்டு கோபத்தில் எழுந்துபோய்விட்டாராம்.
தேவாவால் மேடையிலிருந்து கீழே இறங்கி சென்று மனைவியை தடுக்கவும் முடியாமல் நடிகையிடம் அப்படி பேசாதீர்கள் என்று சொல்லவும் முடியாமல் விழி பிதுங்கி நின்றாராம். நடிகை பேசிக்கொண்டே இருக்க மனைவியும் சென்றுவிட்டாராம். ஆனால் விஷயம் என்னவென்றால் அந்த நடிகை பேச்சின் இறுதியில், நான் சொன்னது எனது முதல் படமான தேவா பற்றி. அதற்கு தேவாதான் இசையமைத்திருந்தார் என்று சொன்னாராம். உடனடியாக இசையமைப்பாளர் தேவா தனது மனதுக்குள், ஏன் மா இதை எனது மனைவி இருந்தபோதே சொல்லியிருக்கக்கூடாதா என உள்ளுக்குள் நொந்துகொண்டாராம்.


Click it and Unblock the Notifications











