தெய்வம் தந்த தெய்வம் என் மனைவி! இல்லறத்தில் நல்லவர் வில்லன் நம்பியர் சொன்ன வார்த்தைகள்.. வீடியோவை பாருங்க!

சென்னை: தமிழ் சினிமாவில் யாராலும் மறுக்க முடியாத நடிகர், அதுவும் வில்லன் நடிகர் என்றால் அது மறைந்த நம்பியார் தான். படத்தில் தான் வில்லன், ஆனால் நிஜத்தில் பலரும் போற்றக் கூடிய மனிதர். ஏதோ புகழுக்காவும் சொத்துக்காவும் அவரை மக்கள் புகழவில்லை. அவரது மொத்த புகழுக்கும் காரணம் அவரது குணநலன் தான். அப்படி இருக்கையில் அவர் தனது மனைவி குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்து தொடர்பான வீடியோ தற்போதும் இணையதளங்களில் வலம் வந்து கொண்டுள்ளது.

வில்லன் நடிகர் என்றாலும் தீவிரமான ஐய்யப்ப பக்தர், தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமான குரு சாமிகளில் இவரும் ஒருவர். சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அதிலும் முத்திரை பதித்தவர். தன்னுடன் படங்களில் சண்டை போட்ட நடிகரான மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலைமைச்சர், எம்.ஜி. ராமச்சந்திரன் மீது பெரும் அன்பும் அக்கறையும் கொண்டவர். நிகழ்ச்சி ஒன்றில் எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இதைப் பார்த்த நம்பியார் தனக்கும் முத்தம் வேண்டும் என்று வாஞ்சையாக கேட்டது தொடர்பான வீடியோக்கள் இப்போதும் இணையத்தில் காணக் கிடைக்கிறது.

My Wife Is the God Given to Me Legendary Villain Actor M N Nambiar s Emotional Words About His Wife Go Viral

தெய்வம்: இப்படி இருக்கையில் நடிகர் நம்பியார் தனது மனைவி குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்தானது ரசிகர்கள் மத்தியில் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதாவது, " தெய்வம் தந்த தெய்வம் எனது மனைவி. ஏனென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அந்தம்மாவுக்கு நான் நன்றாக இருக்க வேண்டும், நான் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் தான் அக்கறை உள்ளது. பிழைக்கத் தெரியாதவள்.

பிழைக்கத் தெரியாதவள்: இந்த வயதில் பேரன் பேத்திகளுடன் சந்தோஷமாக இருக்கலாம். அதை விட்டுவிட்டு, நான் படப்பிடிக்காக எங்கெல்லாம் செல்கிறேனோ, அங்கெல்லாம் சட்டி, பானையை தூக்கிக் கொண்டு வந்து சமைத்துப் போட்டுக் கொண்டு இருக்கிறார். ஒரு மனைவியாக இதைச் செய்கிறார் என்பதைக் காட்டிலும் ஒரு சமையல்காரியாக இதைச் செய்து கொண்டு இருக்கிறார். வாழ்க.

7 ஜென்ம பாவம்: நானே எனது மனைவியிடம் விளையாட்டாக ஒன்று சொல்வேன். இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு 7 ஜென்மங்கள் என்று கூறுவார்கள். அப்படிப் பார்த்தால் நான் எனது 6 ஜென்மங்களில் செய்த புண்ணியங்களின் பலனாக நீ எனக்கு கிடைத்துள்ளாய். நீ உனது 6 ஜென்மங்களின் பாவமாகத்தான் நான் உனக்கு கிடைத்துள்ளேன் என்று கூறுவேன்" என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி தொடர்பான வீடியோ துணுக்குகள் தற்போதும் இணையத்தில் வலம் வந்து கொண்டுள்ளது. பலரும் கணவர்கள் தங்களது மனைவியை தெய்வத்திற்கு நிகராக கருத வேண்டும் என்று கமெண்ட் போட்டும் வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X