அனைத்துக்கும் என் அம்மாவும், மனைவியும்தான் காரணம்.. விஜய் சொன்னதை கேளுங்க பாஸ்

சென்னை: விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று நீதிமன்றம் சென்றிருக்கிறார் மனைவி சங்கீதா. 25 ஆண்டுகளாக வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து வெளியே வருவதற்கு அவர் எடுத்திருக்கும் முடிவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருக்கிறது. அதிலும் அவர் விவாகரத்து மனுவில் சொன்ன விஷயங்களை எல்லாம் பார்த்து விஜய்யின் ரசிகர்கள் நிலைபெயராது சிலை போல் நின்று கொண்டிருக்கிறார்கள்.

நடிகர் விஜய் தனக்கு ரசிகையாக இருந்த ஈழத்து பெண் சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தின் சம்மதத்தோடு கடந்த 1999ஆம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. தனது ரசிகையையே திருமணம் செய்துகொண்டதை பார்த்து அப்போதைக்கு அனைவருமே ஆச்சரியம்தான் பட்டார்கள். மணம் செய்துகொண்ட பிறகு மேட் ஃபார் ஈச் அதராகவே அவர்கள் வாழ்ந்துவந்தார்கள். ஒரு மகனும், ஒரு மகளும் அவர்களுக்கு இருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் கிட்டத்தட்ட திருமண வயதும் நெருங்கிவிட்டது.

My Wife Sangeetha Is My Happiness Vijay s Old Video Trends After Divorce Petition
Photo Credit:

ஆரம்பித்த பிரச்னை: குடும்ப நிலவரம் இப்படி இருக்க அவர்கள் இரண்டு பேருக்கும் கடந்த சில வருடங்களாகவே பிரச்னை என்று அடிக்கடி சோஷியல் மீடியாக்களில் தகவல்கள் வட்டமடித்துக்கொண்டே இருந்தன. ஆனால் அதில் எல்லாம் உண்மை இல்லை; அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார்கள்; அப்படியே பிரச்னை வந்திருந்தாலும் எல்லா குடும்பத்திலும் வரும் பிரச்னை மாதிரிதான் இருக்கும். தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம் என்றெல்லாம் தவெகவினரும், விஜய் ரசிகர்களும் அடித்து சொன்னார்கள்.

ஷாக் கொடுத்த சங்கீதா: ஆனால் அப்படி பேசியவர்களின் வாயை நேற்று அடைத்துவிட்டார் சங்கீதா. விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுவானது ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்று விஜய்யும் நேரில் ஆஜராக வேண்டுமென்று கோர்ட் கூறியிருக்கிறது. இன்னும் சில நாட்களில் விஜய்யின் வீட்டில் அதற்கான சம்மன் ஒட்டப்படும் அல்லது வீட்டுக்கு அனுப்பப்படும் எனவும் தெரிகிறது.

Also Read
திரிஷா காதலிப்பது விஜய்யை அல்ல.. அந்த பெரிய வீட்டு மருமகளாகியிருக்கணும்.. சுசித்ரா என்னென்னம்மோ சொல்றாங்க
திரிஷா காதலிப்பது விஜய்யை அல்ல.. அந்த பெரிய வீட்டு மருமகளாகியிருக்கணும்.. சுசித்ரா என்னென்னம்மோ சொல்றாங்க

நடிகையும் இந்த விவகாரத்தில்: இதில் விவாகரத்து கொடுத்த அதிர்ச்சியை விடவும் விவாகரத்துக்கான காரணங்கள்தான் பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. நடிகை ஒருவருடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் அதை தட்டிக்கேட்ட தன்னை சுதந்திரமாக நடமாட விடவில்லை, நிதிகளுக்கும் கட்டுப்பாடு விதித்தார், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்டேன் என்றெல்லாம் அடுக்கடுக்காக அடுக்கியிருக்கிறார் சங்கீதா. இதன் காரணமாக விஜய் மீது இருந்த பிம்பம் சுக்கு நூறாக உடைந்து போயிருக்கிறது.

ட்ரெண்டாகும் பேட்டி: இப்படி சோஷியல் மீடியா முழுக்க இந்த விவகாரம் பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. இந்நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு விஜய் பேசிய வீடியோ ஒன்றும் ட்ரெண்டாகியுள்ளது. ஒரு விழாவில் கலந்துகொண்ட அவர், 'நான் அழகாக இருக்கேனா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் எனது அம்மாவும், மனைவியும்தான் இதற்கு காரணம் என்று நினைக்கிறேன். மகிழ்ச்சியாக இருந்தால் போதும். அதுதான் அழகை கொண்டு வருகிறது. இவர்கள் மட்டுமின்றி எனது ரசிகர்களும் காரணம்' என கூறியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள், தனது மனைவி மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார். பொது மேடையில் அவருக்கான அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட ஜோடி இப்போது பிரியப்போகிறதே என சோகத்துடன் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X