இளையராஜாவுக்கு கொடுக்கும் இடத்தை உனக்கு கொடுக்க முடியாது போடா.. இசையமைப்பாளரிடம் முறைத்துக் கொண்ட மிஷ்கின்
சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ் சினிமா உலகில் ரசிகர்களே இல்லாமல் இருக்க முடியாது. அவரது சில செயல்கள் சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் அவரது இசை பிடிக்காதவர்கள் என்றால் அது அவரது இசையை கேட்காதர்வர்களாகத்தான் இருக்க முடியும். அப்படி இருக்கும்போது, தமிழ் திரையுலகில் இளையராஜாவின் பக்தர்களாகவே வலம் வரும் சில நட்சத்திரங்களில் ஒருவர் இயக்குநர் மிஷ்கின். இளையராஜா குறித்து யாராவது உதாசீன கருத்துக்களை தெரிவித்து விட்டால் அவர்களிடத்தில் சண்டைக்கு செல்லக் கூடிய நபர். தனது எல்லா படங்களிலும் இசை இளையராஜாவாகத்தான் இருக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுத்து அதை சாத்தியமாக்குபவர்.
இசைஞானியை இவர் கொண்டாடுகிற, ஆராதிக்கிற, ரசிக்கிற அழகைப் பார்த்தாலோ, தெரிந்து கொண்டாலோ கூட, இளையராஜாவின் ரசிகர்களாக இல்லாத நபர்கள் கூட அவரது ரசிகர்களாக மாறிப்போவார்கள். அந்த அளவுக்கு இளையராஜாவின் பக்தன், இளையராஜாவின் பித்தன் என்று கூறலாம். இவர் விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் மிஷ்கின் இளையராஜா குறித்தும் அவருடனான தனது அனுபவங்கள் குறித்தும் தொடர்ந்து ஏதாவது பகிர்ந்து கொண்டே வருகிறார்.

இளையராஜா - மிஷ்கின்: இப்படி இருக்கும்போது சில ஆண்டுகளுக்கு முன்னர், மிஷ்கின் அளித்திருந்த பேட்டியில், இளையராஜாவுக்காக மற்றொரு இசையமைப்பாளரிடம் சண்டைக்குச் சென்றது குறித்து பகிர்ந்திருந்தார். அதாவது, மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் அந்த இசையமைப்பாளரை கமிட் செய்ய முடிவெடுத்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இசையமைப்பாளரை சந்தித்து பேசுகையில், நான் உங்கள் படத்திற்கு இசையமைக்க தயாராக இருக்கிறேன். எனக்கு சம்பளம் கூட வேண்டாம்.

சண்டை: ஆனால், உங்களது முந்தைய படங்களில் எப்படி இசை இளையராஜா என்று மேலே எழுதி, அதன் பின்னர் படத்தின் டைட்டிலை கீழே எழுதுவீர்களோ அதுபோல எனது பெயரை மேலே எழுதி, உங்கள் டைட்டிலை கீழே எழுத வேண்டும் என்று கேட்டுள்ளார். அதுவரை பொறுமையாக இருந்த மிஷ்கின், அதன் பின்னர் சட்டென கோபமாகி அந்த இசையமைப்பாளரிடம் சரியான சண்டை செய்துள்ளார். முதலில் வாய் வார்த்தையாக இருந்தது, ஒரு கட்டத்தில் கை கலப்பாக மாறும் நிலைக்கே சென்று விட்டதாம். அப்போது அந்த இசையமைப்பாளரை நோக்கி, நீ மட்டும் இல்லை வேறு எந்த இசையமைப்பாளருக்கும் அந்த இடத்தைக் கொடுக்க மாட்டேன், நீ என் படத்துக்கே மியூசிக் போட வேண்டாம் போடா என்று தெரிவித்ததாக தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பான பேச்சுக்கள் தற்போது மீண்டும் தலை தூக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











