சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் போதும்.. டைவர்ஸ் பற்றி ஓபனாக பேசிய நாக சைதன்யா.. ட்ரெண்டாகும் வீடியோ

ஹைதராபாத்: சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்ட சூழலில் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர். அதற்கு பிறகு இருவரும் தங்களது பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் சூழலில் சைதன்யா இப்போது சோபிதா துலிபாலாவை திருமணம் செய்யவிருக்கிறார். மிக விரைவில் அவர்களுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. சமந்தா இன்னமும் சிங்கிளாக இருக்கும் நிலையில் அவர் குறித்து நாக சைதன்யா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.

நாக சைதன்யா தெலுங்கு திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் நடித்தபோது சமந்தாவை காதலிக்க ஆரம்பித்தார். அவர்களது காதல் திருமணம்வரை செல்வதற்கு முதலில் நாகார்ஜுனாவின் குடும்பம் ஒத்துக்கொள்ளவில்லை என்றும்; பிறகு சைதன்யா பிடித்த அடத்தால் சமந்தாவுடனான திருமணத்துக்கு குடும்பத்தினர் ஒத்துக்கொண்டார்கள். அவர்களது திருமணம் கோவாவில் நடந்தது.

throwback stories samantha naga chaitanya

பிரிவு: திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை நாக சைதன்யா - சமந்தாவிடையே அடிக்கடி சில வாக்குவாதங்கள் வர ஆரம்பித்தன. அந்த வாக்குவாதங்கள் இரண்டு பேருக்குமிடையே இருந்த உறவில் சிறிது சிறிதாக விரிசலை ஏற்படுத்த ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் அந்த விரிசல் பிரிவில் வந்து முடிந்தது. இரண்டு பேரும் முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்கள். காதலித்து திருமணம் செய்தும் விவாகரத்தா என்று ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தனர்.

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா: சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிக்க ஆரம்பித்தார். சோபிதா பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானமாதேவி கேரக்டரில் நடித்தவர். சைதன்யாவும், சோபிதாவும் தொடர்ந்து சில காலம் டேட்டிங் செய்தார்கள். பிறகு இருவரது காதலும் வீட்டுக்கு தெரியவந்ததை அடுத்து உடனடியாக நாக சைதன்யா தரப்பிலிருந்து க்ரீன் சிக்னல் காட்டப்பட்டது. உடனடியாக இருவருக்கும் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.

திருமணம்: நிச்சயதார்த்தம் முடிந்திருக்கும் நிலையில் இருவரது திருமணமும் ராஜஸ்தானில் நடக்கவிருப்பதாகவும்; தேதி மிக விரைவில் அறிவிக்கப்படுமென்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் இந்த நிச்சயதார்த்தத்தின் மூலம் நாக சைதன்யாவின் மகிழ்ச்சியை நாங்கள் மீண்டும் தேடி கொடுத்துவிட்டோம் என்று நாகார்ஜுனா திருப்தியுடன் பேசியிருந்தார். இதற்கிடையே நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்யவிருப்பதால்; சமந்தாவும் விரைவில் தனக்கான ஒரு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க வேண்டுமென்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் சமந்தாவோ இதுவரை சைலெண்ட்டாகவே இருக்கிறார்.

நாகார்ஜுனா பேட்டி: இந்நிலையில் சமந்தா பற்றி நாக சைதன்யா பேசியிருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு அவர் அளித்திருந்த பேட்டியில் சமந்தாவுடனான விவாகரத்து தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'விவாகரத்து முடிவு எங்கள் இரண்டு பேருக்குமே தனித்தனியாக நல்லது என்றே தோன்றுகிறது. அந்தச் சூழ்நிலையில் அதுதான் சிறந்த முடிவு. சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன்' என்றிருந்தார். இதற்கிடையே சமூக வலைதளங்களில் பரவிய சில வதந்திகள்தான் இருவருக்குமான பிரிவின் முதல் புள்ளி என்று ஒரு தகவல் ஓடுவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X