அந்த நடிகை எனது வீட்டில்தான் தங்குவார்..நெருக்கமாக இருப்பார்..மனைவிக்கும் தெரியும்..நாகார்ஜுனா ஓபன்

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவரது மகன்களான நாக சைதன்யா மற்றும் அகில் ஆகிய இரண்டு பேருமே நடிகர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். நாகார்ஜுனா முதலில் லட்சுமி என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். பிறகு நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தந்தை போலவே மகன் நாக சைதன்யாவும் சமந்தாவை திருமணம் செய்து பிறகு பிரிந்து தற்போது சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

தெலுங்கு திரையுலகின் அடையாளங்களில் ஒருவர் நாகேஸ்வர ராவ். முன்னணி ஹீரோவாக தெலுங்கு சினிமாவில் வலம் வந்த அவர் தயாரிப்பாளராகவும் ஜொலித்தவர். அவரது மகன் நாகார்ஜுனாவும் தனது தந்தை போலவே சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைத்தார். 1986ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான விக்ரம் படத்தில் நடித்து நடிகராக அறிமுகமான அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அவரது அழகும், திறமையும் அவருக்கு நிலையான இடத்தை டோலிவுட்டில் பெற்றுக் கொடுத்தது.

Throwback Stories Nagarjuna Tabu

தமிழிலும் நாகார்ஜுனா: தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் அவர் படங்களில் நடித்திருக்கிறார். முதன்முதலில் பிரவீன் காந்தி இயக்கத்தில் ரட்சகன் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அப்படத்தின் மூலம் தமிழிலும் அவருக்கென்று ரசிகர்கள் உருவாக தொடங்கினார்கள். ஆனால் அதற்கு பிறகு பெரிதாக எந்தத் தமிழ் படத்திலும் நடிக்காத அவர் இப்போது தனுஷுடன் குபேரா படத்தில் நடித்துவருகிறார். இது அவருக்கு முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு திருமணங்கள்: நாகார்ஜுனா முதலில் லட்சுமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர்தான் நாக சைதன்யா. ஆனால் லட்சுமியை பிரிந்துவிட்டார் நாகார்ஜுனா. அதனைத் தொடர்ந்து அமலாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவர் அகில். தற்போது தெலுங்கு சினிமாவில் நாக சைதன்யா, அகில் என இரண்டு பேருமே நடிகர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார். சமந்தாவை விவாகரத்து செய்த சைதன்யாவுக்கு சமீபத்தில்தான் சோபிதா துலிபாலாவுடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தபுவுடன் காதல்: இதற்கிடையே பாலிவுட் நடிகை தபுவுடன் நாகார்ஜுனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இரண்டு பேரும் சேர்ந்து நின்னே பெல்லாடதே, ஆவிடா மா ஆவிடே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்குள்ளான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது என்ற பேச்சுக்களும் அந்த சமயத்தில் எழுந்தன. அதுமட்டுமின்றி இரண்டு பேருமே ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நெருக்கம் இயல்பாகவே அமைந்துவிட்டது; இருவரும் ஒரே வீட்டில்கூட தங்கினார்கள் என்றும் பேச்சுக்கள் எழுந்தன.

நாகார்ஜுனா பேட்டி: இந்நிலையில் தபுவுடனான உறவு குறித்து சில வருடங்களுக்கு முன்பு நாகார்ஜுனா அளித்த பேட்டி ஒன்று தற்போது ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அந்தப் பேட்டியில், "தபுவை பற்றி மறைக்க எதுவுமே இல்லை. அவரது பெயரை சொன்னாலே எனது முகம் பிரகாசிக்கும். என்னை பொறுத்தவரை தபு அழகானவர். எனக்கு ஒரு அழகான தோழி. அவர் எப்போதுமே அப்படித்தான் இருப்பார். எனக்கும் தபுவுக்கும் இடையே நல்லதொரு உறவு இருக்கிறது.

நெருக்கமாக இருக்கிறார்: தபு என்னைவிடவும் எனது குடும்பத்திடம் நெருக்கமாக இருக்கிறார். அவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர். நானும் அதே ஊரில்தான் வளர்ந்தேன். எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. ஹைதராபாத்துக்கு அவர் எப்போதெல்லாம் வருகிறாரோ அப்போதெல்லாம் எனது வீட்டில்தான் தங்குவார். எனது மனைவி அமலாவும் தபு வரும்போதெல்லாம் அவரை நன்றாக கவனித்துக்கொள்வார். அப்பா இருக்கும்போதுகூட தபு வந்தாலும் எல்லோருடனும் அமர்ந்துதான் சாப்பிடுவார். அதுதான் அவரது வழக்கம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X