ஒழுக்கம், கட்டுப்பாடு இருந்தா அவனுக்கு பக்தி தேவையில்லை.. குருசாமி நம்பியார் சொன்ன சூப்பரான விஷயம்!
சென்னை: "ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே.. ருத்ராட்ச பூனைகளா வாழுறீங்க" என நினைத்ததை முடிப்பவன் படத்தில் இடம்பெற்ற கண்ணை நம்பாதே பாடலில் அட்டகாசமான ஆழமான வரிகள் அமைந்திருக்கும். வில்லன் நடிகர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்பது போன்ற பிம்பம் மக்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், ஏகப்பட்ட முறை சபரி மலைக்குச் சென்று பெரிய குரு சாமியாகவே வாழ்ந்த நம்பியார் பற்றி அறிந்துக் கொண்ட பின்னர் மக்கள் இடத்திலேயே அந்த மாயை சற்று விலகி இருந்தது.
ஹீரோக்களாக கொண்டாடப்பட்ட நடிகர்கள் ஒன்றுக்கு பல திருமணங்கள் செய்துக் கொள்வது, நடிகைகளுடன் ஊர் சுற்றுவது என ஏகப்பட்ட கிசுகிசுக்களில் சிக்கும் போது, வில்லனாக நடித்த நடிகர்கள் எல்லாம் கோயில் கட்டியும், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்களாகவும் வலம் வருகின்றனர்.

மறைந்த நம்பியார் கடவுள் நம்பிக்கை பற்றியும் தனிமனித ஒழுக்கம் குறித்து பேசிய த்ரோபேக் பேட்டி ஒன்றை தற்போது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
பக்தி தேவையில்லை: ஒழுக்கம், கட்டுப்பாடு இருந்தா ஒருத்தருக்கு பக்தி என்பதே தேவையில்லை என நடிகர் நம்பியார் பேசிய த்ரோபேக் பேட்டி தற்போது டிரெண்டாகி வருகிறது. கோயிலுக்கு போகணும்னு நான் சொல்லமாட்டேன். ஆனால், நான் போறேன். அதற்கான நேரம் என்னிடம் இருக்கிறது. விரதம் இருக்க டைம் இருக்கிறது. உங்களிடமும் நேரம் இருந்தால் போகலாம். இல்லை என்றாலும், மனதை ஒருமுகப்படுத்தி ஒழுக்கத்துடன் வாழ்ந்தாலே அதுவே கோயில் ஆகிவிடும் என நம்பியார் பேசியுள்ளார்.
கடவுள் இருக்காரோ, இல்லையோ: ஆயிரக் கணக்கான பக்தர்கள் ஒரே எண்ணத்துடன் ஒரு இடத்துக்குச் செல்லும் போது அந்த இடத்துக்கு ஒரு சக்தி உண்டாகிறது. கடவுள் இருக்காரோ, இல்லையோ ஆனால், கூட்டு சக்தி நிச்சயம் நல்லது செய்யும் என்கிற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு. மனுஷங்க மனசுக்கு ஒரு பலம் இருக்குன்னு நான் முழுமையா நம்புறேன் என்றும் நம்பியார் பேசியுள்ளார்.
ஈஸியா நடிக்க வந்தவன் நான்: எந்தவொரு கஷ்டமும் இல்லாமல், சினிமாவில் நடிக்க வந்தவன் நான் தான். நான் நடிக்க வந்ததும் ஃப்ளூக் தான், இன்னைக்கு நான் வாழ்றதே ஃப்ளூக் தான். என்னோட தகுதிக்கு மீறிய வாழ்க்கையை நான் வாழக் காரணமே என்னுடைய ஒழுக்கம் தான்னு நினைக்கிறேன். என்னோட கெட்டிக்காரங்களும் இந்த வாழ்க்கையை வாழ முடியாத நிலையில் இருப்பாங்க, எம்ஜிஆருடன் நான் நடித்ததை பார்த்து நம்ம எம்ஜிஆரோட ஆக்ட் பண்ணவரா இவரு என்று கூறுவார்கள் என பேசியுள்ளார். அடுத்தவருக்கு தீங்கு செய்யாமல் சுய ஒழுக்கத்துடன் வாழ்ந்தாலே போதும் என்றும் கடவுளை தேடிச் சென்று கும்பிடுவதால் மட்டுமே ஒருவர் நல்லவராக ஆகிவிட முடியாது என்றும் வேஷம் போடுவதை விட வாழ்ந்து காட்டுவது தான் சிறந்தது என்று நம்பியார் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











