நயன்தாராவை அசிங்கப்படுத்திய நமீதா.. லேடி சூப்பர் ஸ்டார் என்ன செய்தார் தெரியுமா?.. இது வேறயா?
சென்னை: தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. அவரது நடிப்பில் கடைசியாக அன்னபூரணியும், ஜவானும் வெளியாகின. அடுத்ததாக ராக்காயி, மண்ணாங்கட்டி, டாக்சிக் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன. அதுமட்டுமின்றி ஹிந்தியிலும் அவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க நேற்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு Nayanthara Beyond The Fairy Tale என்ற ஆவணப்படமும் ரிலீஸானது.
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தமிழின் டாப் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ஒரு படத்துக்கு கிட்டத்தட்ட பத்து கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறுகிறார் என்று கூறப்படுகிறது. இத்தனை வருடங்கள் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கோலோச்சியிருந்த அவர்; ஹிந்தியிலும் கால் பதித்திருக்கிறார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அவர் நடித்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

படு பிஸி: ஜவான் ஹிட்டுக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் பல வாய்ப்புகள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழில் அவர் மண்ணாங்கட்டி, ராக்காயி உள்ளிட்ட படங்களிலும் கன்னடத்தில் டாக்சிக் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.மேலும் மலையாளத்திலும் ஒரு படத்தில் நடித்துவருகிறார். விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஒருபக்கம் குடும்பம், மறுபக்கம் நடிப்பு என படு பிஸியாக இருக்கிறார் அவர்.
Nayanthara Beyond The Fairy Tale: சூழல் இப்படி இருக்க நேற்று அவர் தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி அவரது வாழ்க்கை பயணம், திருமண நிகழ்வு பற்றிய ஆவணப்படம் Nayanthara Beyond The Fairy Tale நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. அதில் அவர் சந்தித்த பிரச்னைகள், அனுபவங்கள் என ஏராளமான விஷயங்களை பேசினார். இதற்கிடையே இந்த ஆவணப்படத்தால் அவருக்கும் தனுஷுக்கும் முட்டிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
நயன் பேட்டி: இந்நிலையில் தன்னை பில்லா பட ஷூட்டிங்கில் நமீதா அசிங்கப்படுத்தியதாக நயன் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், "அஜித்துடன் நான் நடித்த பில்லா படத்தின்போது ஆரம்பத்தில் நமீதாவுக்கும் எனக்குமான உறவு நன்றாகவே இருந்தது. முதலில் நானாகவே சென்று அவரிடம் பேசினேன். இருவரும் நன்றாகத்தான் பேசிக்கொண்டிருந்தோம். முதல் சில நாட்கள் அப்படித்தான் சுமூகமாக போகும் என்றும் எனக்கு தெரியும்.
நமீதா அசிங்கப்படுத்தினார்: திடீரென ஒருநாள் நமீதா என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். அவருக்கும் எனக்கும் பெரிதாக எந்தப் பிரச்னையோ, சண்டையோகூட நடக்கவில்லை. ஸ்பாட்டுக்கு அவர் வந்தால் அனைவரிடமும் ஹாய் சொல்வார். எனக்கு மட்டும் சொல்லமாட்டார். ஒருகட்டத்தில் என்ன நடக்கிறது என்றே எனக்கு தெரியவில்லை. அதனையடுத்து நானும் அப்படியே விட்டுவிட்டேன். அவருடன் பேசுவதையும் நிறுத்திவிட்டேன். மற்றவர்களுக்கு நம்முடன் பிரச்னை இருக்கும்பட்சத்தில் அது அவர்களின் பிரச்னையாக மாறிவிடுகிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











