மனோஜ் பாரதிராஜா எனக்காக அதை செய்யவே இல்லை.. மனைவி நந்தனா என்ன இப்படி சொல்லிருக்காங்க?
சென்னை: பாரதிராஜாவின் மகனான மனோஜ் சில வாரங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரிடமும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருக்கு நந்தனா என்ற மனைவியும், மதிவதினி, ஆர்த்திகா என மகள்களும் இருக்கிறார்கள். சாதூரியன் படத்தில் நடித்தபோது நந்தனாவை காதலித்த மனோஜ்; தனது வீட்டு சம்மதத்துடன் அவரையே திருமணம் செய்துகொண்டார். மனோஜின் மறைவு நந்தனாவை பெரிய சோகத்தில் தள்ளியிருக்கிறது என்பது குறிப்பிடத்த்க்கது.
பாரதிராஜாவுக்கு ஒரு மகள், ஒரு மகன். தனது மகன் மனோஜை தாஜ் மஹால் படத்தில் ஹீரோவாக அறிமுகமாக்கினார் அவர். அதுமட்டுமின்றி அவரே அந்தப் படத்தை இயக்கவும் செய்தார். பாரதிராஜாவின் இயக்கத்தில் அறிமுகமான பல நடிகர்கள் நடிகைகள் இன்றளவு பிஸியாகவும், புகழோடும் இருக்கிறார்கள். அதன் காரணமாக மனோஜும் அப்படித்தான் வந்துவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் மனோஜ் நடித்த முதல் படமே படுதோல்வியை சந்தித்தது.
அடுத்தடுத்த படங்கள்: தாஜ் மஹால் தோல்வியடைந்தாலும் மனோஜுக்கு பட வாய்ப்புகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வந்துகொண்டுதான் இருந்தன. அதன்படி வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், கடல் பூக்கள், ஈரநிலம், அல்லி அர்ஜுனா என அவரும் தொடர்ந்து நடித்தார். ஆனால் அவற்றில் வருஷமெல்லாம் வசந்தம் படம் மட்டும்தான் ஓரளவுக்கு வெற்ரியை பெற்றது. கடல் பூக்கள் படத்தில் அவரது நடிப்பு நன்றாக இருந்தது என்று ரசிகர்களும், திரைத்துறையினரும் மனம் திறந்து பாராட்டினார்கள். இருப்பினும் அவரால் பெரிய வெற்றியை பெற முடியவில்லை.

சாதூரியன் மனோஜ்: சூழல் இப்படி இருக்க சாதூரியன் என்ற படத்தில் நடித்தார் மனோஜ். அதில் ஹீரோயினாக கேரளாவை சேர்ந்த நந்தனா நடித்திருந்தார். அவர் ஏற்கனவே தமிழில் ஏபிசிடி உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்தவர். சாதூரியனில் நடித்தபோது மனோஜுக்கும், நந்தனாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. முதலில் அந்தக் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க பாரதிராஜா ரொம்பவே யோசித்தார். பிறகு மகனின் சந்தோஷம்தான் தனது சந்தோஷம் என நினைத்து சம்மதம் தெரிவித்து திருமணமும் செய்துவைத்தார்.
இயக்குநர் அவதாரம்: மனோஜுக்கு அடிப்படையில் இயக்குநராக வேண்டுமென்றுதான் ஆசை. திருமணமான பிறகு இயக்குநராகும் கனவை நோக்கி மனோஜை வேகமாக ஓட வைத்ததில் நந்தனாவுக்கு முக்கிய பங்கு உண்டு. மனோஜ் தோல்வி முகத்தில் இருந்தபோதெல்லாம் அவரை அப்படி பாதுகாத்தவரும் நந்தனாதான் என பலரும் சொல்வார்கள். இப்படிப்பட்ட நிலைமையில்தான் மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கினார் மனோஜ். ஆனால் அந்தப் படமும் தோல்வியைத்தான் சந்தித்தது.
உயிரிழந்த மனோஜ்: அந்தப் படத்துக்கு பிறகு படம் இயக்கும் எண்ணத்தில் இருந்த அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு வீட்டில் ஓய்வில் இருந்த அவருக்கு திடீரென சில வாரங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பாரதிராஜா குடும்பத்தினர் மட்டுமின்றி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரையும், நந்தனாவை எப்படியாவது தேற்றிவிட வேண்டும் என மனோஜின் உறவினர்கள் முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் மனோஜ் குறித்து நந்தனா பேசிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. இரண்டு பேரும் கலந்துகொண்ட ஒரு பேட்டியில் பேசிய நந்தனா, "சாதூரியன் ஷூட்டிங் முடிந்த பிறகு 24 மணி நேரமும் ஏழு நாட்களும் நாங்கள் ஒரு மாதம்வரை மெசேஜ்களை செய்துகொண்டே இருந்தோம். ஆனா ஒரு முறைகூட மனோஜ் எனக்கு ஃபோன் செய்யவே இல்லை. அவரது குரலை கேட்க வேண்டும் என்கிற ஏக்கமும் எனக்கு இருந்தது. ஒருமுறை அவரிடமே எனக்கு ஃபோன் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தோன்றவில்லையா என்று மெசேஜில் கேட்டேன். உடனே அவரோ, எனக்கு எஸ்டிடி இல்லை என்று சொன்னார். அதற்கு பிறகுதான் எஸ்டிடியை ஆக்டிவேட் செய்து எனக்கு ஃபோன் செய்ய ஆரம்பித்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











