கல்யாணம் பண்ணிக்கமாட்டேனு சொன்னார்.. திருமணம் குறித்து ஓபனாக பேசிய நெப்போலியன்

சென்னை: நடிகர் நெப்போலியன் 90களில் பிரபலமான நடிகராக இருந்தவர். ஹீரோ, வில்லன் என கலந்துகட்டி நடித்த அவர், போக்கிரி படத்தில் குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்தவர். நடிப்பு மட்டுமின்றி அரசியலில் நுழைந்து மத்திய இணை அமைச்சராகவும் இருந்த அவர்; இப்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாகவே நெப்போலியனின் மகன் திருமணம் குறித்துதான் பேசுபொருளாக இருக்கிறது.

பாரதிராஜாவின் இயக்கத்தில் அறிமுகமானவர் நெப்போலியன். முதல் படமே இயக்குநர் இமயத்தின் இயக்கம் என்பதால் நடிப்பை சரியாகவே கொடுத்திருந்தார். அதற்கு பிறகு எஜமான், சீவலப்பேரி பாண்டி, கிழக்கு சீமையிலே என பல படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் மிகச்சிறப்பாக செய்யக்கூடியவர் நெப்போலியன். போக்கிரி படத்தில் குணசித்திர வேடத்திலும் நடித்து கலக்கியிருந்தார் நெப்போலியன்.

Throwback Stories Napolean Dhanush

அமெரிக்காவில் செட்டில்: நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் தனது தடத்தை பதித்த அவருக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு பேரில் தனுஷுக்கு உடல்நிலை சரியில்லாததால்; அவரது வசதிக்காகவும், சிகிச்சைக்காகவும் அமெரிக்கா சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இந்தச் சூழலில் தனுஷுக்கு மிக விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. அவர் திருநெல்வேலியை சேர்ந்த அக்‌ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்.

ஜப்பானில் திருமணம்: தனுஷின் உடல்நிலை காரணமாக அவரால் விமானத்தில் பயணம் செய்து இந்தியா வர முடியாது. கப்பலில் வந்தாலும் நீண்ட நாட்கள் ஆகும். எனவே திருமணத்தை ஜப்பானில் வைக்க திட்டமிட்டிருக்கிறார் நெப்போலியன். அதுகுறித்த அறிவிப்பை மிக சமீபத்தில்தான் அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷுக்கு திருமணம் நடக்கவிருப்பதுதான் கடந்த சில நாட்களாக அதிகம் பேசப்படுகிறது.முக்கியமாக தனுஷின் உடல்நிலையை காரணம் காட்டி பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட சிலர் அவதூறாக பேசினர். ஆனால் தனுஷுக்கு திருமணம் நடக்கவிருப்பது மகிழ்ச்சியான விஷயமே. எனவே அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

நெப்போலியன் பேட்டி: இந்நிலையில் நெப்போலியன் தனது திருமணம் பற்றி பேசியிருக்கும் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நான் சினிமாவில் ஓரளவுக்கு வளர்ந்துவிட்ட பிறகு எனக்கு திருமணம் செய்ய முடிவு செய்து வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்தார்கள். அப்படி எனது மனைவி கல்லூரியில் படிக்கும்போது எனது ஜாதகத்தையும், அவரது ஜாதகத்தையும் பார்த்தார்கள். எங்களுக்குள் 9 பொருத்தங்கள் வந்தன.

முடியாது என்று சொன்னார்: அதனையடுத்து பெண் பார்ப்பதற்காக வீட்டுக்கு சென்றோம். அப்போது எனது மனைவி யார் மாப்பிள்ளை என்று கேட்டார். அதற்கு எனது உறவினர்கள் என்னை காண்பித்து, 'இவர்தான் மாப்பிள்ளை. இவர் நடிகர் நெப்போலியன்' என்று சொன்னார்கள். உடனே எனது மனைவியோ, 'நான் இவரை திருமணம் செய்துகொள்ளமாட்டேன். அவர் எனக்கு வேண்டாம்' என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

அவர் ஒரு கொடுமைக்காரர்: உடனே அங்கிருந்தவர்கள் ஏன் என்று கேட்டார்கள். அதற்கு அவரோ 'இவர் எஜமான் படத்தில் வயிற்றில் உள்ள கருவையே கலைக்கும் அளவுக்கு கொடுமைக்காரர். இவருடன் எப்படி குடும்பம் நடத்துவது?' என்று கேட்டார். அதற்கு அங்கிருந்தவர்களோ, அதெல்லாம் சினிமா. நிஜத்தில் அவர் நல்லவர். விசாரிக்காமல் பெண் கொடுப்போமா என்று எனது மாமனார் சமாதானம் செய்தார். அதற்கு பிறகுதான் எனது மனைவி எங்களது திருமணத்துக்கு ஒத்துக்கொண்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X