Nayanthara: எதிர்நீச்சல் படத்துக்கு காசே வாங்காமல் டான்ஸ் ஆடிய நயன்தாரா.. தனுஷின் த்ரோபேக் பேட்டி!

சென்னை: தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற வந்த பஞ்சாயத்து முற்றிய நிலையில், நயன்தாராவின் 3 பக்க அறிக்கையால் வெடித்துள்ளது. தனுஷுக்கு எதிராக நடிகைகள் பலரும் திரண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனாக இருந்த நிலையில், பலரும் அமைதி காத்து வந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்ய முடிவு செய்து பிரிந்து விட்ட நிலையில், தனுஷுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அதிகளவில் கிளம்பி வருகின்றன.

nayanthara dhanush throwback


சமீபத்தில், தயாரிப்பாளர்கள் கூட தனுஷுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பேசினார்கள். அந்த தயாரிப்பாளர்களுக்கு படம் பண்ணிக் கொடுக்கிறேன் என்றும் தனுஷ் ஒப்புக் கொண்டார். 3 நொடி வீடியோவுக்காக நயன்தாராவிடம் தனுஷ் 10 கோடி கேட்டதாக நயன்தாரா குற்றச்சாட்டு வைத்த நிலையில், நயன்தாரா தனுஷுக்காக இலவசமாக பண்ண விஷயத்தை தனுஷே பேசிய த்ரோபேக் வீடியோவை ஷேர் செய்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

தனுஷ் கேட்பது நியாயம் தானே: நயன்தாராவுக்காக ராணா டகுபதி, நாகார்ஜுனா, உபேந்திரா, ராதிகா சரத்குமார், அட்லீ உள்ளிட்ட பல பிரபலங்கள் நயன்தாரா பற்றி பேசியுள்ளனர். ஆனால், தமிழில் எந்தவொரு முன்னணி நடிகர்களும் நயன்தாராவுக்காக பேசியது போல தெரியவில்லை. இந்நிலையில், ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸில் இலவசமாக ஒன்றும் போடவில்லையே என்றும் தனுஷ் கேட்பது நியாயம் தானே அவர் கேட்கும் 10 கோடி தொகையை கொடுக்க வேண்டியது தானே? என தனுஷ் ரசிகர்கள் நயன்தாராவை விளாசி வருகின்றனர்.

பழைய காதல்கள்: மேலும், நடிகை நயன்தாராவின் பழைய காதல் கதைகளையும் கிளறி தனுஷ் ரசிகர்கள் அவரை சோஷியல் மீடியாவில் டேமேஜ் பண்ண ஆரம்பித்து விட்டனர். வல்லவன் படத்தின் ஷூட்டிங்கின் போது அந்த படத்தின் இயக்குநரும் ஹீரோவுமான சிம்புவை காதலித்து வந்தார் நயன்தாரா என்றும் வில்லு படத்தின் ஷூட்டிங்கின் போது அந்த படத்தின் இயக்குநர் பிரபுதேவாவை காதலித்து வந்தார். நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் விக்னேஷ் சிவனை காதலித்த நிலையில், அவரை திருமணம் செய்துக் கொண்டார் என பழைய விஷயங்களையும் கிளறி வருகின்றனர்.

எதிர்நீச்சல் படத்துக்கு இலவசமாக: தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த் நடித்து வெளியான எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்ற ஐட்டம் பாடலுக்கு நடிகை நயன்தாரா தனுஷ் உடன் இணைந்து நடனமாடியிருந்தார். அதற்காக நயன்தாரா ஒரு ரூபாய் கூட வாங்கவே இல்லை என தனுஷ் பேசிய த்ரோபேக் வீடியோவை ஷேர் செய்து நயன்தாரா ரசிகர்கள் தனுஷுக்காக நயன்தாரா செய்த நன்றியை எல்லாம் தனுஷ் இப்படி மறக்கலாமா? என விளாசி வருகின்றனர்.

அமைதி காக்கும் தனுஷ்: இந்த விவகாரம் குறித்து நிச்சயம் நயன்தாரா போல தனுஷ் ரியாக்ட் செய்ய மாட்டார் என்றும் இதை சட்ட ரீதியாக அணுகுவார் அல்லது அப்படியே கடந்துச் செல்வார் என்றே கூறுகின்றனர். இரு தரப்பு ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் தங்களின் சண்டையை ஆரம்பித்துள்ள நிலையில், இந்த விவகாரம் எங்கே போய் முடியப் போகிறது என்றும் ஏற்கனவே விக்னேஷ் சிவன் படத்துக்கு பல இடங்களில் இருந்து சிக்கல் வரும் நிலையில், இந்த பிரச்சனை அவரது படங்கள் வெளியாகும் போதும், நயன்தாரா படங்கள் வெளியாகும் போதும் எதிரொலிக்கும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X