என்னது அஜித் படத்தின் ரீமேக்குக்கு நோ சொன்னாரா நயன்தாரா?.. இப்படியும் நடந்திருக்கா?

சென்னை: நடிகை நயன்தாரா சினிமாவுக்கு வந்த புதிதில் முதலில் சிம்புவை காதலித்தார். அந்தக் காதல் பாதியில் முடிந்ததை அடுத்து பிரபுதேவாவை காதலித்து மதமும் மாறினார். ஆனால் அந்தக் காதலும் பிரேக் அப்பில் முடிந்தது. இதனையடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். அப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அவர். அவரது நடிப்பில் கடைசியாக டெஸ்ட் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.

கேரளாவில் பிறந்து வளர்ந்து மலையாள திரையுலகில் தனது திரை பயணத்தை ஆரம்பித்த நயன்தாரா; தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்ததாக ரஜினிக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது. அந்த ஹிட்டுக்கு பிறகு நயனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அந்தவகையில் சிம்புவுடன் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்தார். அந்த சமயத்தில் இரண்டு பேரும் தீவிரமான காதலில் இருந்தார்கள்.

ஓவர் நெருக்கம் காட்டிய நயன்: அந்தக் காதலின் வெளிப்பாடாக இரண்டு பேரும் அந்தப் படத்தில் படு நெருக்கமாக நடித்தார்கள். அதுவரை அப்படி ஒரு கவர்ச்சியை நயன் காட்டியதில்லை. சூழல் இப்படி இருக்க இரண்டு பேரும் தனி அறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அந்தப் புகைப்படங்கள் வெளியானதற்கு காரணம் சிம்புதான் என்று அப்போது வெளிப்படையாகவே குற்றச்சாட்டுக்கள் வந்தன. ஆனால் இருவரும் அதுகுறித்து எதுவும் பேசாமல் தங்கள் காதலை பிரேக் அப் செய்துகொண்டார்கள்.

Nayanthara has said no to acting in the Telugu remake of Ajith starrer Nerkonda Paarvai

லேடி சூப்பர் ஸ்டார் காதல்: சிம்புவுடனான காதல் முறிவுக்கு பிறகு வில்லு படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் பிரபுதேவாவை காதலித்தார் நயன். பிரபுவுக்காக கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கு மாறினார். மேலும் சினிமாவிலிருந்தும் ஒதுங்கினார். ஆனால் அந்தக் காதலும் பாதியில் முடிந்ததை அடுத்து சில காலம் தனிமையில் இருந்த நயன் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இரண்டு பேரும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகும் நடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

நயன்தாராவின் டெஸ்ட்: அந்தவகையில் அவரது நடிப்பில் கடைசியாக டெஸ்ட் திரைப்படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அவருடன் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். ஓரளவுக்கு எதிர்பார்ப்புடன் படமானது வெளியானது. ஆனால் படத்தின் திரைக்கதை சரியில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக படமானது கலவையான விமர்சனத்தையே பெற்றது. இந்நிலையில் நயன்தாரா குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

என்ன தகவல்?: அதாவது ஹிந்தியில் வெளியான பிங்க் திரைப்படம் நேர்கொண்ட பார்வை என்கிற பெயரில் தமிழில் ரீமேக்கானது. அதில் அஜித் ஹீரோவாக நடித்திருந்தார். அப்படம் ஓரளவுக்கு வெற்றியை பெற்றது.தமிழில் ரீமேக்கானதைத் தொடர்ந்து தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் உருவானது. அதில் முதலில் ஹீரோயினாக நடிக்க நயன்தாராவிடம் படக்குழு கேட்டதாகவும்; ஆனால் தன்னுடைய கதாபாத்திரம் சிறிதாக இருப்பதால் அதில் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X