தனுஷ் பெர்சனலா எப்படி தெரியுமா?.. ஒரு மாதிரியான கேரக்டர்.. நயன்தாரா இப்படி புகழ்ந்திருக்காங்களே

சென்னை: தனுஷுக்கும் நயன்தாராவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு மோதல் வெடித்தது. அந்த மோதல் விவகாரம் நீதிமன்றம்வரை சென்றது. அதுமட்டுமின்றி தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் இரண்டு பேரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டபோது நயன் நடந்துகொண்ட விதத்தையும் பலர் விமர்சனம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷ் குறித்து நயன் கூறியதை பார்க்கலாம்.

தனுஷ்ம், நயன்தாராவும் யாரடி நீ மோகினி படத்தில் முதன்முறையாக ஜோடியாக நடித்தார்கள். அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. அதுமட்டுமின்றி அப்படத்திலிருந்து இரண்டு பேருக்கும் நல்ல நட்பும் உருவாக தொடங்கியது. அந்த நட்பின் அடிப்படையில்தான்; சிவகார்த்திகேயனை வைத்து தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாடினார் நயன்தாரா. அதுமட்டுமின்றி அவர் தயாரித்த நானும் ரௌடிதான் படத்திலும் ஹீரோயினாக நடித்தார்.

வெடித்த மோதல்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோதுதான் அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார் நயன். இப்போது அவர்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார்கள். நிலைமை நல்லபடியாக சென்றுகொண்டிருக்க; நயன்தாரா பற்றி ஒரு ஆவண படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. அந்த ஆவண படத்தில் நானும் ரௌடிதான் பட இசை, சில ஃபுட்டேஜுகளை பயன்படுத்த தனுஷ் NOC கொடுக்க மறுத்துவிட்டார்.

Nayanthara spoke openly about Dhanush s personal character in an interview
Photo Credit:

அறிக்கை விட்ட நயன்: இதனால் ஆத்திரமடைந்த நயன்தாரா காட்டமாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில் தனுஷை காட்டமாகவே விமர்சித்திருந்தார். தனுஷோ எந்த ரியாக்‌ஷனையும் கொடுக்கவில்லை. இது ஒருபக்கம் இருக்க தனுஷ் அனுமதி மறுத்ததையும் மீறி அந்த ஆவண படத்தில் நானும் ரௌடிதான் ஃபுட்டேஜுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதனால் ஆத்திரமடைந்த தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தனுஷ் Vs நயன்தாரா: அந்த் விவகாரம் நடந்துகொண்டிருந்த சமயத்தில்தான் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டு திருமணம் நடந்தது. அதில் இவர்கள் இரண்டு பேருமே கலந்துகொண்டார்கள். திருமணத்தில் இரண்டு பேரும் பேசிக்கொள்ளவில்லை. அதேசமயம் நயனின் செயல்பாடுகள், அவர் அமர்ந்திருந்த விதம் என அனைத்துமே தனுஷுக்கு எதிராக இருந்தது என்று D ரசிகர்கள் கொதிப்படைந்து கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் யாரடி நீ மோகினி பட சமயத்தில் இரண்டு பேரும் கொடுத்த பேட்டி ஒன்று திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது. அப்பேட்டியில் தனுஷ் எப்படிப்பட்ட ஆள் என தொகுப்பாளர் கேட்க, அதற்கு நயனோ, 'பெர்சனலாகவா இல்லை ப்ரொஃபஷனலாகவா' என கேட்டுவிட்டு, 'தனுஷ் பெர்சனலாக நல்ல மனிதர். ரொம்பவே நேர்மையானவர் அஅவர் மனதில் பட்டதை ஓபனாக சொல்லிவிடக்கூடியவர்.

ஒரு மாதிரியான கேரக்டர்: அது ஒரு மாதிரியான கேரக்டர். ஒரு விஷயம் நன்றாக இல்லை என்றால் நன்றாக இல்லை கேவலமாக இருக்கிறது என்று சொல்லிவிடுவார். அதேபோல் ப்ரொஃபஷனலாக எடுத்துக்கொண்டால் அவர் ஒரு டேக், இரண்டு டேக்குகளுக்கு மேல் போகமாட்டார்" என்றார். தனுஷின் நடிப்பில் அடுத்ததாக இட்லி கடை உள்ளிட்ட படங்களும், நயனின் நடிப்பில் மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களும் வெளியாகவிருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X