Nayanthara: விக்னேஷ் சிவனால் நடு ரோட்டில் கண் கலங்கிய நயன்தாரா... பின்னாடியே ஓடிவந்த ரசிகர்கள்!
சென்னை: போடா போடி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.
தொடர்ந்து நானும் ரவுடிதான், தானா சேர்ந்தக் கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களையும் இயக்கினார்.
நானும் ரவுடிதான் படத்தை இயக்கிய போது காதலிக்கத் தொடங்கிய விக்கியும் நயனும், கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், விக்னேஷ் சிவனால் நயன்தாரா நடு ரோட்டில் கண் கலங்கிய சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது.

நடு ரோட்டில் கண் கலங்கிய நயன்தாரா:நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கோலிவுட்டின் நட்சத்திரத் தம்பதியாக வலம் வருகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். 2015ம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
நயன்தாராவுடன் விஜய் சேதுபதி, ஆர்ஜே பாலாஜி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், நானும் ரவுடிதான் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், தங்களது காதலை மறுத்துவந்த இந்த ஜோடி கடந்தாண்டு மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டது.
தற்போது நயன் - விக்கி தம்பதிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விக்னேஷ் சிவனால் நயன்தாரா நடு ரோட்டில் அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்னேஷ் சிவனின் முதல் படமான போடா போடி பிளாப் ஆனது. ஆனால், அதன் பின்னர் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படமே அவருக்கு அடையாளம் கொடுத்தது.
இந்தப் படத்தின் வெற்றிக்கு கதையை விடவும் விஜய் சேதுபதி, நயன்தாரா இருவரின் நடிப்பு தான் பாசிட்டிவாக அமைந்தது. இந்நிலையில், நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பில் தான் நயன்தாரா நடு ரோட்டில் அழுதாராம். இந்தப் படத்தில் நயன்தாரா ரோட்டில் அழுதபடி வரும் ஒரு சீன் உண்டு. அந்தக் காட்சியை படமாக்கிய போது, நயன்தாராவை ரோட்டில் அழுதுகொண்டே வர சொல்லியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
ஆனால், அப்போது அது ஷூட்டிங் என்று தெரியாத ஒரு ரசிகர், நயன்தாரா பின்னால் ஓடிவந்து அவரை என்னாச்சு என்னாச்சு என கேட்டுள்ளாராம். நயன்தாரா அழுது கொண்டே வரும்போது அந்த ரசிகரும் கூடவே வந்ததால், விக்னேஷ் சிவன் கட் சொல்ற வரையிலும் நயன்தாரா அழுதுகொண்டே இருந்தாராம். ஆனால், கடைசிவரை அங்கிருந்த ரசிகருக்கு அது ஷூட்டிங் என தெரியவே இல்லையாம்.

மேலும், இந்தக் காட்சியை மூன்று முறை படப்பிடிப்பு செய்துள்ளார் விக்னேஷ் சிவன். ஒவ்வொரு முறையும் படப்பிடிப்பு நடக்கும் போது கூட்டம் சேர்ந்துவிடும். அதனால், அடுத்த முறை நயன்தாராவை எங்கேயாவது நடுரோட்டில் இறக்கி விட்டுவிடுவோம். அவங்களும் அழுதுகிட்டே வந்து நடிச்சு கொடுத்ததாக விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் இதுகுறித்து அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இயக்குநர்கள் நெல்சன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் குறித்தும் விக்னேஷ் சிவன் மனம் திறந்துள்ளார். அதில், இயக்குநர் நெல்சன் தன்னுடைய சின்ன வயதில் இருந்த நண்பன் எனக் கூறியுள்ளார். அதேபோல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படம் வெளியான பின்னரே நண்பராக பழக்கம் என்றுள்ளார் விக்னேஷ் சிவன். இந்நிலையில், விக்னேஷ் சிவனால் நயன்தாரா நடுரோட்டில் அழுத சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











