அஜீத் வீட்டில் சங்கீதா.. ஷாலினியிடம் கற்றுக்கொள்ளுங்கள்.. நெட்டிசன்ஸ் அட்வைஸ்!
சென்னை: தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா பலவிதமான புகார்களை கூறி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுத்தாக்கல் செய்திருந்தார். இது மிகப்பெரிய அளவில் புயலை கிளப்பியுள்ளது.
நட்சத்திர தம்பதிகளான விஜய் மற்றும் சங்கீதா கடந்த சில ஆண்டுகளாகவே பிரிந்து வாழ்ந்து வந்தனர். இசை வெளியீட்டு விழா, சினிமா நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக சேர்ந்து வரவில்லை. குழந்தைகள் படிப்பதால், சங்கீதா வெளிநாட்டில் இருப்பதாக சொல்ப்பட்டு வந்த நிலையில், விஜய்யின் மனைவி சங்கீதா, கடந்த வாரம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த விவாகரத்து மனுவில், நடிகை ஒருவருடன் அவருக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 2021 ஆம் ஆண்டு நான் லண்டன் சென்று விட்டேன். அதன் பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்ந்தோம்.

விஜய் சங்கீதா விவகாரம்: ஆனால், தொடர்ந்து அவர், நடிகையின் உறவை முறித்துக் கொள்ளாமல், தொடர்ந்து அவருடன் உறவில் இருந்தால், இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். இதனால் அவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்றும், அவரது வருமானத்திற்கும், சமூகத்தில் அவருக்கு இருக்கும் பெயருக்கு ஏற்றபடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என சங்கீதா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த விஷயம் குறித்து சங்கீதா தரப்பில் இருந்தோ, விஜய் தரப்பிலிருந்தோ எந்தவிதமான அதிகாரபூர்வமான விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை.

அண்ணிக்கு அட்வைஸ் பண்ணுங்க: இந்நிலையில், இணையத்தில் அஜித் வீட்டில் சங்கீதா இருக்கும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் வீட்டில் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில், விஜய் மற்றும் பல நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த வீடியோவில் அஜித் கையில் தனது மகளை வைத்திருக்கிறார். விஜய் அவர் அருகில் அமர்ந்து கொண்டு இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதேபோல ஷாலினி அருகில் சங்கீதா அமர்ந்து கொண்டு இருவரும் சிரித்து சிரித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். தற்போது டிரெண்டாகும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இவர்கள் இருவரையும் எதிரிபோல் சித்தரித்திருப்பது இணையம் தான். உண்மையில் அஜித், விஜய் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதை இந்த வீடியோ காட்டுகிறது என்று பதிவிட்டுள்ளனர். அதேபோல, சங்கீதா, ஷாலினியிடம் சில விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும், ஷாலினி மேடம் அண்ணிக்கு அட்வைஸ் பண்ணுங்க என இணையவாசிகள் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











