Rajini -அடித்து துவைத்த அப்பா..துணையாய் அண்ணன்கள், அக்கா..ரஜினி ரொம்ப பட்டுருக்கார்..யாரும் அறியாத மறுபக்கம்

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரஜினிகாந்த்தின் சிறிய வயது வாழ்க்கை குறித்த புதிய தகவல்கள் இணையத்தில் பரவிவருகின்றன.

இந்திய சினிமாவின் அடையாளமாக இருப்பவர் ரஜினிகாந்த். நடத்துநராக இருந்தபோது நடிப்பு மீது இருக்கும் ஆர்வத்தால் அந்த வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு சினிமா கல்லூரியில் சேர்ந்தார். பிறகு சின்ன சின்ன ரோல்களில் நடித்து ஹீரோவாக அறிமுகமாகி இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார். அதற்கு முழுக்க முழுக்க காரணம் அவர் மட்டும்தான். வந்த தடைகளை எல்லாம் படிக்கல்லாக மாற்றி முன்னேறியவர்.

New information about Rajinikanths childhood life is Trending on Internet

இன்ஸ்பிரேஷன்: சிவாஜி உச்சத்தில் இருந்தபோது நடிக்க வந்தவர்களுக்கு எப்படி சிவாஜி சாயல் அடிக்குமோ அதேபோல்தான் 90களுக்கு பிறகு நடிக்க வந்தவர்களுக்கும் ரஜினி சாயல் அடிக்கும். அந்த அளவு தனது நடிப்பால் அனைவரையும் பல வருடங்களாக கட்டிப்போட்டு வைத்திருக்கிறார். தனது நடை, உடை என அனைத்திலுமே தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கிக்கொண்டவர்.

பட்ட கஷ்டம்: ரஜினி இப்போது பல கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரர். இன்னும் பல தலமுறைகள் அவரது வீட்டில் உட்கார்ந்துகொண்டே சாப்பிடலாம். ஆனால் ரஜினியோ தனது ஆரம்பகாலத்தில் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டவர். இதுவரை அவர் சினிமாவுக்குள் வந்து பட்ட கஷ்டங்களை பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் சின்னஞ்சிறு வயதிலிருந்து இளைய வயதுவரை அவர் பட்ட கஷ்டங்கள் பெரிதாக யாரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

என்ன கஷ்டம்: இப்படிப்பட்ட சூழலில் அதுகுறித்த புதிய தகவல் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றன. அதாவது ரஜினியின் அப்பா பெயர் ராமோஜி ராவ் கெய்க்வாட், அக்காவின் பெயர் அஸ்வத், மூத்த அண்ணன் பெயர் சத்யநாராயண, இளைய அண்ணன் பெயர் நாகேஸ்வர ராவ். ரஜினியின் தந்தை காவல் துறை அதிகாரியாம். தாய் சிறு வயதிலேயே இறந்துவிட்டாராம். தாய் உயிரிழந்தபோது ரஜினியின் கண்கள் எல்லாம் எப்போது விளையாடப்போவோம் என்ற எண்ணத்தில் வீதியைத்தான் நோக்கிக்கொண்டிருந்ததாம். ஏனெனில் அவ்வளவு சின்ன வயது அவருக்கு. அப்போது ஒரு தாயாக இருந்து அவரை கவனித்துக்கொண்டவர் அவரது அக்கா அஸ்வத்தானாம்.

அடித்து துவைத்த அப்பா: ரஜினியின் தந்தை எப்போதும் பிள்ளைகள் மீது எரிந்து விழுபவராம். மனைவி இறந்த ஆற்றாமையால் வந்த கோபம். அஸ்வத், சத்யநாராயணா, நாகேஸ்வர ராவ் பள்ளி சென்ற பிறகு தான் சமைத்த பாத்திரங்களை ரஜினியை கழுவ சொல்லிவிட்டு வேலைக்கு செல்வாராம் ராமோஜி. ஆனால் ரஜினியோ தந்தை சென்ற பிறகு விளையாடுவதற்கு பறந்துவிடுவாராம். மாலை வரும் அப்பா கழுவாத பாத்திரங்களை பார்த்து ரஜினியை அடித்து துவைத்து விடுவாராம்.

தம்பிதான் முக்கியம்: ஒருகட்டத்தில் சத்யநாராயணாவிடம் ராமோஜி; நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கோ என்னால் உங்களை பார்த்துக்கொள்ள முடியவில்லை என்ற கண்டிஷனை வைக்க படிப்பை விட்டு வேலைக்கு சென்று பதின்ம வயதில் திருமணம் செய்துகொண்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரஜினிக்கும் அதிக மூர்க்கத்தனம் வளர்ந்திருக்கிறது. இதன் காரணமாக எதற்கெடுத்தாலும் கை நீட்டுவது; ஊர் வம்பில் முதல் ஆளாக நிற்பது என ரகளை செய்திருக்கிறார்.

ரவுடியை புரட்டிய ரஜினி: அப்படிப்பட்ட சமயத்தில் தன்னுடைய இரண்டாவது அண்ணன் நாகேஸ்வர ராவை நாராயணன் என்ற ரவுடி தாக்கியதை அறிந்து ஒற்றை ஆளாக மார்க்கெட்டுக்கு சென்று அந்த நாராயணனை புரட்டி எடுத்துவிட்டாராம் ரஜினி. குடும்ப பொறுப்பை மொத்தமாக சுமந்த சத்யநாராயணா ரஜினியின் போக்கை கட்டுப்படுத்த ஆசிரம பள்ளியில் சேர்த்துவிட்டாராம். இதற்கிடையே நாகேஸ்வர ராவ் உயிரிழந்துவிட்டாராம். ஒருவழியாக படிப்பை ஓரளவு படித்து பிறகு நடத்துநராக இருந்து தற்போது தமிழ் சினிமாவுக்கு வருபவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார் ரஜினி.

தன்னை சிறு வயதில் கடுமையாக தாக்கிய அப்பாவை கடைசிவரை விட்டுக்கொடுக்காத ரஜினி தன்னுடைய சம்பாத்தியத்தில் ராமோஜியை அப்படி பார்த்துக்கொண்டாராம். இந்தத் தகவல்தான் இணையத்தில் படுவேகமாக பரவிவருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் தலைவர் சின்ன வயசுல எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கார் என்று உருக்கத்துடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X