அந்த விஷயத்தில் தங்கை நிரோஷாவை கோர்த்துவிட்ட ராதிகா.. செம தெளிவா ப்பா.. என்ன நடந்தது தெரியுமா?

சென்னை: நடிகை ராதிகா கோலிவுட்டில் சீனியர் நடிகைகளில் ஒருவர். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் மிகச்சிறந்த நடிகை என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். சரத்குமாரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அவர் தற்போதும் சினிமாவில் பிஸியாக நடித்துவருகிறார். சமீபத்தில்கூட ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி பேசிய அவர் பல அதிரடி கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தனது தங்கை நிரோஷாவை ஒரு விஷயத்தில் கோர்த்துவிட்ட சம்பவ தெரியவந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் தவிர்க்கவே முடியாத ஆளுமை எம்.ஆர்.ராதா. பெரியாரின் தீவிர தொண்டரான அவருக்கு பிறந்தவர்தான் ராதிகா. வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவுக்கு வந்திருந்த அவரை எதேச்சையாக பார்த்த பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார். ஆனால் முதலில் படத்தில் நடிப்பதற்கு ராதிகாவுக்கு விருப்பமே இல்லை. இருந்தாலும் விடாத பாரதிராஜா எப்படியோ ராதிகாவிடம் பேசி சம்மதிக்க வைத்துவிட்டார்.

throwback stories radhika nirosha

முன்னணி நடிகை: ராதிகாவின் முதல் படமான கிழக்கே போகும் ரயில் மெகா ஹிட்டடித்தது. முக்கியமாக ராதிகாவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல அப்ளாஸ் கிடைத்தது.முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து டாப் நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வித்தியாசத்தையும் காண்பிக்க ஆரம்பித்தார்.

திருமணம்: சினிமாவில் பீக்கில் இருந்தபோது அவர் நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தனை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண உறவு பாதியில் முடிந்தது. இதனையடுத்து நடிகர் விஜயகாந்த்தை அவர் தீவிரமாக காதலித்ததாகவும் ஆனால் அந்தக் காதல் சில காரணங்களால் கைகூடாமல் போனதாகவும் ஒரு பேச்சு உண்டு. இறுதியாக நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.

பிஸியான நடிகை: ஒருகட்டத்தில் ஹீரோயின் வாய்ப்பு குறைய ஆரம்பிக்க குணசித்திர வேடங்களில் நடித்து ரகளை செய்தார் ராதிகா. ஜீன்ஸ், சூர்யவம்சம், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்திலும் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிக்காட்டியிருந்த அவர்; கடைசியாக மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். சினிமா தவிர்த்து சின்னத்திரையில் சித்தி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, சித்தி 2 என ஏகப்பட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.'

அதிரடி கருத்து: சமீபத்தில்கூட ராதிகா தலைப்பு செய்தியானார். அதாவது ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை கிளப்பிய சூழலில்; நடிகர்கள் கேரவனில் கேமராவை வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை ரசிப்பார்கள் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்தார். அது இந்த விஷயத்தில் மேற்கொண்டு ஒரு பரபரப்பை பற்ற வைத்தது. இந்தச் சூழலில் அவர் தனது தங்கை நிரோஷாவை ஒரு விஷயத்தில் கோர்த்துவிட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.

என்ன நடந்தது?: அதாவது ஒருமுறை ராதிகாவுக்கு மூக்கு குத்திக்கொள்ள வேண்டுமென்று ஆசை வந்ததாம். அப்போது தனது தங்கை நிரோஷாவையும் உடன் அழைத்து சென்றாராம். அவர்கள் இருவரும் மூக்கு குத்தும் கடைக்கு சென்ற சமயத்தில் ஒரு பெண் மூக்கு குத்திக்கொண்டபோது பயங்கரமாக கத்திவிட்டாராம். அந்தப் பெண் கத்தியதை பார்த்து ராதிகா பயந்துவிட்டாராம். உடனடியாக அந்தக் கடைக்காரரிடம் இல்லை எனக்கு வேண்டாம் முதலில் எனது தங்கைக்கு குத்துங்கள் என்று நிரோஷாவை கோர்த்துவிட்டாராம்.

உடனே அதிர்ச்சியான நிரோஷாவோ, 'நான் சும்மாதானே வந்தேன் எனக்கு வேண்டாம்' என்று சொல்ல; ராதிகாவோ இல்லை நான் சொல்றதை கேளு என்று நிரோஷாவுக்கு மூக்கு குத்த வைத்துவிட்டாராம். அவருக்கு குத்தியதை பார்த்த ராதிகாவோ தனக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லி அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம். இதனை நிரோஷா ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X