இதனால் தான் நித்யா மேனன் அந்த நபருக்கு கை கொடுக்கலையா?.. அப்பவே அப்படி பேசியிருக்காங்களே!

சென்னை: காதலிக்க நேரமில்லை ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை நித்யா மேனன் உதவியாளர் ஒருவர் கை குலுக்க கேட்டபோது, அதற்கு தனக்கு உடம்பு சரியில்லை என்றும் உங்களுக்கு கொரோனா ஏதும் வந்துவிடும் என்றுக்கூறி தவிர்த்துவிட்டது பெரும் சர்ச்சையாக சோஷியல் மீடியாவில் வெடித்துள்ளது. நடிகை நித்யா மேனன் நடிகர்கள் ஜெயம் ரவி, வினய் உள்ளிட்டவர்களுடன் கட்டிப் பிடித்தும் இயக்குநர் மிஷ்கினுக்கு முத்தமும் கொடுத்த நிலையில், இப்படி பண்றாரே என அவரை பலரும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

ஆனால், உண்மையாகவே தெரியாத நபர்களுக்கு நடிகை நித்யா மேனன் கை கொடுப்பதை எப்போதுமே விரும்புவதில்லை என்பதுதான் அந்த நபருக்கு அவர் கை கொடுக்காமல் சென்றதற்கு உண்மையான காரணம் என நித்யா மேனன் ரசிகர்கள் அவரது த்ரோபேக் வீடியோ ஒன்றை ஷேர் செய்து வருகின்றனர்.

nithya menen throwback kadhalikka neramillai

அந்த பேட்டியில் தான் ஏன் தெரியாத நபர்களிடம் கை குலுக்குவது கிடையாது என்பது குறித்து நடிகை நித்யா மேனனே விளக்கமாக கூறியுள்ளார்.

சினிமாவே பிடிக்கல: சாதாரண நபராக இருக்க முடியவில்லை. அதனால், சினிமாவை விட்டே விலக முடிவெடுத்தேன். ஆனால், தனுஷ் உடன் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் கிடைத்த தேசிய விருது காரணமாக மீண்டும் நடித்து வருகிறேன் என சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நித்யா மேனன் கூறியிருந்தார். இப்போது கூட வேற ஆப்ஷன் கிடைத்தால் சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்றும் ஷாக் கொடுத்திருந்தார்.

கை கொடுக்காத பிரச்சனை: கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படம் வரும் ஜனவரி 14ம் தேதி திரையரங்குகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. அதனை முன்னிட்டு நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நித்யா மேனன் உதவியாளர் ஒருவருக்கு கை கொடுக்க மறுத்ததும் அதற்கு அவர் சொன்ன விளக்கத்தையும் நெட்டிசன்கள் கம்பேர் செய்து வீடியோக்களாக வெளியிட்டு நித்யா மேனன் தீண்டாமையை கடைபிடிக்கிறார் என சர்ச்சையை கிளப்பினர்.

நித்யா மேனன் த்ரோபேக் பேட்டி: இந்நிலையில், நடிகைகள் தானே என அசால்ட்டாக கையை கொடு என சிலர் சினிமா விழாக்களில் நடந்துக் கொள்வது தனக்கு சுத்தமாக பிடிக்காது என்றும் தெரியாத நபர்களிடம் கை கொடுக்கும் பழக்கத்தை தான் கடைபிடிப்பதில்லை என்றும் ஆனால், அந்த நேரத்தில் அதை சொன்னாலும் புரியாது என்பதால் தவிர்த்துவிடுவேன் எனக் கூறியுள்ளார். இதே சாதாரண ஒரு பொண்ணுக்கிட்ட போய் யாராவது கையை கொடுண்ணு சொல்வாங்களா? நடிகைன்னா பப்ளிக் பிராப்பர்ட்டின்னு நினைச்சிக்கிறாங்க என பல வருடங்களுக்கு முன்பு நித்யா மேனன் பேசிய பேட்டியை தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து இதனால் தான் நித்யா மேனன் அப்படி நடந்துக் கொண்டார் என விளக்கம் அளித்து வருகின்றனர்.

விருப்பம் இருந்தால் தான்: யாருக்கு கை கொடுக்க வேண்டும், யாரை கட்டிப்பிடிக்க வேண்டும், முத்தம் கொடுக்க வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட விருப்பம் என்றும் பிடிக்காத நபராக இருந்தால் கை கொடுக்காமல் தவிர்க்க அவருக்கு முழு உரிமையும் உண்டு என நித்யா மேனன் செயலை ஆதரித்து அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். நித்யா மேனனை முன் பின் தெரியாத ரசிகர்கள் அவரது படங்களை பார்க்காமல் தவிர்த்துவிட்டால் என்ன ஆகும் என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X