Ajith - கஜினி படத்தில் அஜித் நடிக்காததற்கு இதுதான் காரணமா?.. அய்யய்யோ ஏகே மிஸ் பண்ணிட்டாரே.. ரசிகர்கள் கவலை

சென்னை: Ajith(அஜித்) கஜினி படத்தில் அஜித்குமார் நடிக்காததற்கு காரணமாக ஒரு விஷயம் சொல்லப்படுகிறது.

தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார் அஜித். ரசிகர் மன்றங்களை கலைத்த பிறகும்கூட அவரது படங்களுக்கான ஓபனிங் குறைவதே இல்லை. ஸ்க்ரீனில் அவர் வந்தாலே போதும் என்று நினைக்கும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். குறிப்பாக மன்றங்களை கலைத்த பிறகும் அவருக்கு எப்படி இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று பலரும் ஆச்சரியப்படுகிறார்கள்.

One thing is said to be the reason why Ajith Kumar did not act in Ghajini

துணிவு: அவரது நடிப்பில் கடைசியாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான துணிவு திரைப்படம் வெளியானது. அந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பையே பெற்றது. அதன் காரணமாக அஜித் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றார். துணிவில் நடித்துக்கொண்டிருந்தபோதே அவர் தனது 62ஆவது படத்தில் கமிட்டானார். முதலில் அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. பிறகு அவர் வெளியேற மகிழ் திருமேனி படத்துக்குள் வந்தார்.

விடாமுயற்சி: அதன்படி மகிழ் திருமேனி இயக்கும் அஜித்தின் 62ஆவது படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் அப்டேட் குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்றாலும் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்துகொண்டிருக்கிறது. நிச்சயம் இந்தப் படம் ஆக்‌ஷன் ஜானரில்தான் உருவாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள். சமீபத்தில்தான் அஜித் தனது ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.

அஜித் விட்ட படங்கள்: இதற்கிடையே அஜித்குமார் கமிட்டாகி விலகிய படங்களின் லிஸ்ட் ரொம்பவே பெரிது. அவை சூப்பர் ஹிட்டாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நந்தா, நான் கடவுள், ஜெமினி, கஜினி உள்ளிட்ட படங்கள் அடங்கும். இவற்றில் கஜினி சூர்யாவின் கரியரில் எவ்வளவு பெரிய திருப்புமுனையை கொடுத்தது என்பது அனைவரும் அறிந்தது.

மிரட்டல்: இந்தப் படம் முதலில் மிரட்டல் என்ற பெயரில் அஜித், அசின் நடிப்பதாக இருந்தது. அதற்கான ஃபோட்டோஷூட் எடுக்கப்பட்டு சில நாட்கள் ஷூட்டிங்கும் சென்றது. ஆனால் சஞ்சய் ராமசாமி கேரக்டரில் நடிக்க ஒத்துக்கொண்ட அஜித்; மொட்டையடித்து தழும்புடன் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்து படத்திலிருந்து விலகிவிட்டார் என்று புதிய தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் அஜித்தை வைத்து தீனா படத்தை இயக்கித்தான் இயக்குநராக அறிமுகமானார். அதற்கு பிறகு அஜித்தை வைத்து படம் இயக்கவில்லை. தற்போது அவர் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X