அஜித்தை பார்த்து எம்ஜிஆர் மேக்கப் மேன் அப்படி சொன்னாரா?.. அட வேற லெவலா இருக்கே

சென்னை: அஜித்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதியும், குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதியும் ரிலீஸாகவிருக்கின்றன. இந்த வருடத்தில் அஜித்தின் இரண்டு படங்கள் ரிலீஸாவதால் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். விடாமுயற்சி படத்திலிருந்து நேற்று வெளியான இரண்டாவது சிங்கிளும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தச் சூழலில் அஜித் குறித்து எம்ஜிஆரின் மேக்கப் மேன் கூறிய விஷயம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

சினிமா பின்னணி இல்லாமல் திரைத்துறைக்குள் வந்தவர் அஜித்குமார். ஆரம்பத்தில் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்த அவர் முட்டி மோதி தனக்கென தனியிடத்தை பிடித்து வைத்திருக்கிறார். மன்றங்களை கலைத்தாலும், தன்னை இப்படி அழைக்கக்கூடாது என அவர் கண்டிஷன் போட்டாலும் அவருக்கான ரசிகர்கள் எப்போதும் குறைந்தபாடில்லை. சொல்லப்போனால் தமிழ் சினிமா ஹீரோக்களில் அஜித்துக்குத்தான் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என்பதும் ஆச்சரியத்துக்குட்பட்டது.

throwback stories ajith mgr

விடாமுயற்சி: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக அவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். முதலில் அந்தப் படம் ஷூட்டிங் தொடங்கி தாமதமாக நடந்ததால் படம் ட்ராப் செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் ரசிகர்களின் வயிற்றில் பால் வார்க்கும் விதமாக படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ட்ரெய்லர், சிங்கிள்கள்: அதனையடுத்து படத்தின் ட்ரெய்லரும், இரண்டு சிங்கிள்களும் வெளியாகின. ட்ரெய்லரில் மகிழ் திருமேனியின் மேக்கிங்கை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். அதேபோல் இரண்டு சிங்கிள்களும் சூப்பர் டூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றிருக்கின்றன. முதலில் படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் பிப்ரவரி ஆறாம் தேதிக்கு அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போயிருக்கிறது.

குட் பேட் அக்லி: இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித்குமார். இதில் எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மார்க் ஆண்டனி படத்தை இயக்கி பெரும் கவனம் ஈர்த்த இயக்குநரின் இயக்கம் என்பதால் இந்தப் படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்தப் படமானது ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

பி.வாசு பேட்டி: இந்நிலையில் அஜித்தை வைத்து பரமசிவன் படத்தை இயக்கிய பி.வாசு ஒரு பேட்டியில் அஜித் குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "பரமசிவன் படத்தை நான் இயக்கும்போது என்னுடய அப்பா அஜித்தை பார்த்து ஒரு வார்த்தை கூறுவார். அதாவது, யோவ் நீ எம்ஜிஆர் மாதிரியே இருக்க என்று. என்னுடைய அப்பா பீத்தாம்பரம்தான் எம்ஜிஆருக்கு 40 வருடங்களாக மேக்கப் மேனாக இருந்தார். மேலும் அஜித்தை பார்த்து உன் கலர் அப்படியே எம்ஜிஆர் கலர்தான் என்று கூறுவார். இத்தனை வருடங்களில் என் அப்பா ஒருவரை பார்த்து எம்ஜிஆர் மாதிரி இருக்கிறாய் என்று கூறியது அஜித்தை பார்த்து மட்டும்தான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X