படையப்பா வாய்ப்பு வந்தபோது.. ரஜினி அப்படிப்பட்டவர்.. சௌந்தர்யா சொன்னது தெரியுமா?
சென்னை: நடிகை சௌந்தர்யா தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டாப் நடிகையாக வலம் வந்தவர். ரஜினியுடன் அருணாச்சலம், படையப்பா என இரண்டு படங்களில் நடித்த அவர்; கமலுடன் காதலா காதலா படத்திலும் நடித்திருக்கிறார். மிகச்சிறந்த நடிகை என்று பெயர் எடுத்த அவர் கடந்த 2004ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில் படையப்பா படம் பற்றி அவர் பேசிய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த சௌந்தர்யா; தமிழில் கார்த்திக் ஹீரோவாக நடித்த பொன்னுமணி திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆர்.வி. உதயகுமார் இயக்கியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததை அடுத்து வரிசையாக தமிழ் படங்களில் கமிட்டானார் அவர். அந்தவகையில் ரஜினி, கமல் ஹாசன், விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். ஒருகட்டத்தில் தெலுங்கைவிடவும் தமிழில் படு பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வர ஆரம்பித்தார். கண்டிப்பாக கோலிவுட்டில் மற்ற ஹீரோயின்களை இவர் அசால்ட்டாக சாய்த்துவிடுவார் என்ற நிலைமைதான் இருந்தது.
பீக்கில் இருக்கும்போதே திருமணம்: தமிழில் ஒரு பக்கம் பிஸியானாலும் தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை விடவில்லை அவர். அங்கும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். இப்படிப்பட்ட சூழலில் தன்னுடைய கரியர் உச்சத்தில் இருக்கும்போதே ரகு என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். பொதுவாக ஒரு நடிகை மார்க்கெட்டின் பீக்கில் இருக்கும்போது திருமணம் செய்துகொள்ள தயங்கும் சூழலில் சௌந்தர்யா திருமணம் செய்துகொண்டது பலருக்கும் ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது.

கோர விபத்தில் மரணம்: திருமணம் செய்துகொண்ட பிறகு குடும்பத்தோடு செட்டில் ஆன அவர்; அரசியலில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். அந்தவகையில் 2004ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக தனது சகோதரருடன் ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. அதில் உடல் கருகி சௌந்தர்யாவும், அமரும் உயிரிழந்தார்கள். அவரது உயிரிழப்பு தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் உச்சக்கட்ட சோகத்தை ஏற்படுத்தியது. அவர் உயிரிழந்து 20 வருடங்களுக்கும் மேல் ஆனாலும் அவரது இடத்தை இன்னொரு நடிகையால் நிரப்ப முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் அவர் உயிருடன் இருந்தபோது படையப்பா படம் பற்றி பேசிய வீடியோ ஒன்று திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது. அந்த வீடியோவில் அவர், "ரஜினியுடன் அருணாச்சலம் படத்தில் நடித்து முடித்தபோதே இது போதும் என்றுதான் இருந்தேன். ஆனால் படையப்பா பட வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த வாய்ப்பு வந்தபோது என்ன ரியாக்ட் செய்வதென்றே எனக்கு தெரியவில்லை. ரஜினிகாந்த் ரொம்பவே எளிமையாக பழகக்கூடியவர். உடன் பணியாற்றுபவர்களை ரொம்பவே கம்ஃபர்டபிளாக வைத்திருப்பார்" என்றார்.
படையப்பா ரீ ரிலீஸ்: முன்னதாக கடந்த 1999ஆம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட படையப்பா திரைப்படம் ரஜினிகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த டிசம்பர் 12ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆனது. முதன்முறை ரிலீஸானபோது எப்படி படத்துக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்ததோ அதேபோல் ரீ ரிலீஸிலும் கிடைத்தது. இதுவரை அப்படம் மொத்தம் 15 கோடி ரூபாய் வரை கலெக்ட் செய்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











