உலகத்தின் மிகச்சிறந்த சி.எம் விஜய்னு ட்ரம்ப் ட்வீட் போடுவாரு.. அப்போவே கொளுத்திப்போட்ட பார்த்திபன்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக ஆகியிருக்கிறார் விஜய். அவரது கட்சி மொத்தம் 108 தொகுதிகளில் வென்று மற்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்திருக்கிறது. மேலும் தவெக அமைச்சரவையில் காங்கிர, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளும் பங்கெடுத்திருக்கின்றன. இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் திடீரென ட்ரெண்டாகியுள்ளது.

விஜய் சினிமாவில் ஓரளவுக்கு வளர ஆரம்பித்த போதே அவரை அரசியலுக்கு கொண்டு வருவதற்கான விதையை போட்டுவிட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர். அதன் காரணமாகத்தான் விஜய் ரசிகர் மன்றங்கள் எல்லாம் விஜய் மக்கள் இயக்கமாக மாறின. ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. ஒருவழியாக காலம் கனிந்ததை அடுத்து சில வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இவரது கட்சியால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று பலரும் சொன்னார்கள்.

Parthiban s Prediction About Vijay Becoming CM Goes Viral After Election Victory
Photo Credit:

சொல்லி அடித்த கில்லி: ஆனால் விஜய் மட்டும் ரொம்பவே கான்ஃபிடென்ஸாக இருந்தார். எந்த மேடையில் ஏறினாலும், 'நல்லதே நடக்கும். கான்ஃபிடென்ஸா இருங்க' என சொல்லிக்கொண்டே இருந்தார். ரசிகர்களின் உற்சாகத்தை குறையவிடாமல் பார்த்துக்கொள்ள அப்படி சொல்கிறார் என்றுதான் பலரும் நினைத்தார்கள். அவர் நினைத்தபடியே தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்றுவிட்டது. மொத்தம் 108 தொகுதிகளை வென்று தனி பெரும் கட்சியாக தன்னை நிலை நிறுத்தியது.

முதலமைச்சர் ஜோசப் விஜய்: அதனையடுத்து காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளின் ஆதரவோடு பெரும்பான்மையை நிரூபித்து முதலமைச்சராக பதவியேற்றார் சி.ஜோசப் விஜய். மேலும் தவெக அமைச்சரவையில் இடதுசாரிகள் தவிர்த்து மேற்கூறியவற்றில் மற்ற கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதன் காரணமாக ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற நீண்டநாள் எதிர்பார்த்த விஷயம் நம் மாநில அரசியல் களத்தில் அரங்கேறியிருக்கிறது. விசிகவினர் எல்லாம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

செயல்பாடு எப்படி?: அவர் முதலமைச்சராக பதவியேற்று அதிகபட்சம் 15 நாட்கள் இருக்கும். மகளிருக்கான கலைஞர் உரிமை தொகை, நான் முதல்வன் திட்டம் உள்ளிட்டவைகளை எல்லாம் எந்த பிரச்னையுமின்றி செயல்படுத்திவருகிறார். அதேசமயம் சட்டம் ஒழுங்குதான் கையை மீறி சென்றுகொண்டிருக்கிறது. பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கை பிராதனமாக முன்வைத்துதான் அக்கட்சி வாக்கையே கேட்டது. ஆனால் தவெக ஆட்சியிலும் அது சரியாக இல்லாததை பார்த்து மக்கள் நொந்து போயிருக்கிறார்கள்.

ட்ரெண்டாகும் வீடியோ: இருப்பினும் போகப்போக அனைத்தையும் விஜய் சரி செய்துவிடுவார் என்பது தவெகவினரின் நம்பிக்கை. இந்நிலையில் மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பார்த்திபன் பேசிய வீடியோ திடீரென இப்போது ட்ரெண்டாகியுள்ளது. அவர் அப்போது, "நீங்கள் வேண்டுமானால் பாருங்க. விஜய்யின் அடுத்த படத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு ட்வீட் செய்வார். 'உலகத்தின் மிகச்சிறந்த சி.எம் விஜய்தான்' என ட்வீட் செய்யப்போகிறார்" என குறிப்பிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X