அவர் எல்லாம் செட் ஆகமாட்டார் பாஸ்.. விஜய்யை இயக்கும் வாய்ப்பை உதறித்தள்ளிய இயக்குநர் யார் தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் அவரது கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில்; 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில்தான் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழுக்க முழுக்க அரசியல் பணிகளில் ஈடுபடவிருக்கிறார் விஜய். இந்தச் சூழலில் அவர் நடித்த நண்பன் படம் பற்றி புதிய விஷயம் ஒன்று ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.

கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் ராஜாவாக வலம் வந்துகொண்டிருப்பவர் விஜய். படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே அவரது படம் பல நூறு கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட விமர்சன ரீதியாக அடி வாங்கியது. ஆனால் உலகம் முழுவதும் 600 கோடி ரூபாய்வரை வசூல் செய்துவிட்டதாக படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதேபோல்தான் லியோவுக்கு முன்னதாக வந்த வாரிசு, பீஸ்ட் படங்களும்.

Parthiban Was the Choice To Nanban Movie Director Here are the details

GOAT: விஜய் லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் கேரளாவில் நடந்து முடிந்தது. இப்படமானது டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றி கழகம்: இதற்கிடையே விஜய் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று பலரும் நீண்ட காலமாக சொல்லிக்கொண்டிருந்தனர். அதனை உண்மையாக்கும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறது விஜய். நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் 2026ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது அக்கட்சி. நிச்சயமாக எங்கள் தளபதியை கோட்டைக்கு அனுப்புவோம் என்று அவரது ரசிகர்கள் சூளுரைத்துவருகின்றனர்.

கடைசி படம்: முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபடவிருப்பதால் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்று விஜய் அறிவித்திருக்கிறார். எனவே அவரது ரசிகர்களுக்கு சிறிய வருத்தம் ஏற்பட்டிருக்கிறது. விஜய்யின் கடைசி படமாக தளபதி 69 உருவாகிறது. அதனை வெற்றிமாறன் இயக்குவார் என்ற தகவல்கள் பரவின. ஆனால் ஆர்.ஜே பாலாஜி அல்லது கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரில் ஒருவர் இயக்கலாம் என்று இப்போது கூறப்படுகிறது.


நண்பன்: இந்நிலையில் விஜய்யை இயக்கும் வாய்ப்பை பார்த்திபன் உதறி தள்ளிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான நண்பன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும். இந்தப் படம் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் ஆகும். படத்தின் ரீமேக்கை முதலில் பார்த்திபன் இயக்குவதாக இருந்ததாம். அதற்கான பேச்சுவார்த்தை நடந்தபோது, 3 இடியட்ஸ் ரீமேக் கதைக்கு விஜய் செட் ஆகமாட்டார். அதேபோல் நான் ரீமேக் படங்களையும் இயக்குவது கிடையாது என்று சொல்லி அந்த வாய்ப்பை உதறி தள்ளினாராம் பார்த்திபன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X